பக்கம்:மகான் குரு நானக்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

மகான் குருநானக்


8.குருநானக் கைது

பாபக்தாத் நகர் சென்று வந்த சத்குருவும், அவரது சீடர்களும் சில மாதங்கள் ஒய்வெடுத்துக் கொண்ட பின்பு, மீண்டும் தங்களது புனித பயணத்தைத் துவங்கினார்கள்.

அவர்கள் மூவரும் அமெனாபாத் நகரில் சத்குருவின் ஏழை நண்பரான தச்சர் வீட்டிலே தங்கியிருந்தார்கள். அப்போது லாயச் சக்ரவர்த்தியான பாபர் படைகள் டெல்லி மாநகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தன.

மறுநாள் சத்குருவும், அவரது சீடர்களும் தூக்கம் கலைந்து கண்விழித்துப் பார்த்தபோது, பாபர் படைகள் தச்சர் வீட்டைச் சூழ்ந்து முற்றுகையிட்டிருந்ததைக் கண்டார்கள். அமெனாபாத் நகரில் சிறைபிடிக்கப்பட்ட மற்ற மக்களோடு, குருநானக்கும், அவரது சீடர்களும் கைது செய்து சிறைபிடிக்கப்பட்டிருந்தார்கள்.

அந்த நாளில் யார் யார் சிறைபிடிக்கப்படுகிறார்களோ, அவர்கள் தலையில் பாரத்தை ஏற்றிச் சுமக்க வைத்து சிறைக்கோ, விசாரணை மன்றத்துக்கோ அழைத்துச் செல்வது வழக்கம். அதைப் போலவேதான், பாபர் பேரரசன் ஆட்சியிலும் நடந்தது. குருநானக், மர்தானா, பாலா ஆகியோர் தலைகளில் பாபர் படையினர் பாரத்தை ஏற்றிச் சுமக்க வைத்து அழைத்துப் போனார்கள் மர்தான்ா பயந்தான்் எங்கே பாரம் தனது தலையை உடைத்து விடுமோ என்ற அச்சத்தால் ஆனால், நடந்தது என்ன தெரியுமா?

குருநானக், மர்தானா, பாலா ஆகியர் மூவர் தலை மீதும் சுமைகள் வைக்கப்பட்டன. தனது தலை உடைந்து நொறுங்கப் போகிறது என்று மர்தானா பயந்தான்! ஆனால், அவர்கள்