பக்கம்:மகான் குரு நானக்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

மகான் குருநானக்


வழக்கம் போல சத்குரு தனது சொந்த ஊரான கர்தர்பூருக்குத் திரும்பினார். அவர் அங்கே சில நாட்கள் தங்கிய பிறகு, மீண்டும் தனது ஞானோபதேசப் பணிகளைச் செய்திட மேற்குத் திசைக்குச் சென்றார். அவருடைய சீடர்களும் அவரைத் தொடர்ந்தார்கள்.

பஞ்சாப் மாநிலத்தின் மேற்குத் திசையிலே உள்ள ஹசன் அப்தல் என்ற ஊரருகே உள்ள ஒரு குன்றருகே சென்று குருநானக் அமர்ந்தார். சீடர்களும் அவரைப் பின் தொடர்ந்து சென்று தங்கினார்கள். அந்த இடத்தில் பாறை ஒன்று இருந்தது. கதிரவ துடைய கடும் வெயில் அப்போது தகித்துக் கொண்டிருந்தது. மர்தான்ாவுக்குத் தண்ணீர் தாகம் எடுத்தது. அதை அவனால் பொறுத்துக் கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான். சத்குருவிடம், குருவே, நான் தாகத்தால் தவிக்கிறேன் என்றான். சத்குரு, கவலைப்படாதே மர்தானா அதோ அந்தக் குன்றின் மேலே ஒரு நீரூற்று இருக்கிறது. அதிலே இருக்கும் தண்ணீரைக் குடித்துத் தாகத்தை தனித்துக் கொண்டு வா என்று அவனை அனுப்பி வைத்தார்.

மர்தானா சென்றான். வேகமாக அந்தக் குன்றின் மேல் ஏறினான். நீரூற்று இருப்பதை மகிழ்ச்சியோடு கண்டான். தாகத்தில் தவித்துக் கொண்டிருந்த அவன், நீரைக் குடிக்கச் சென்ற போது, ஒரு பக்கிரி ஓடிவந்து, நீ யார் எப்படி இந்த நீரூற்றுக்கு வந்து தண்ணீரைக் குடிக்கலாம் என்றான். தடுத்தான்.

'சத்குரு தான் என்னை அனுப்பி வைத்தார். எனக்குத் தண்ணீர் தாகம் என்றான். உடனே பக்கிரி வேண்டுமானால், தனியாக ஒரு நீரூற்றைத் தோண்டித் தருமாறு உனது குருவிடம் போய் கூறு' என்று மர்தானாவைத் திருப்பி அனுப்பி விட்டான்.

மர்தான் திரும்பி வந்து, பக்கிரி கூறியதைக் குருவிடம் கூறினான். உடனே சத்குரு, 'மர்தானா, மறுபடியும் அதே பக்கிரியிடம் போ! பணிவாக அவரை வேண்டிக் கொள். அவர் உன்னைத் தண்ணீரைக் குடிக்க அனுமதிப்பார்' என்றார்.

தாகத்தால் தவித்துக் கொண்டிருந்த அவன், மீண்டும் பக்கிரியிடம் சென்று பணிவாகத் தண்ணீர் குடிக்க அனுமதிக்கும். படி வேண்டினான். ஆனாலும், பக்கிரி அவனுக்குத் தண்ணீர்