பக்கம்:மகான் குரு நானக்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

67


குடிக்க அனுமதி தரவில்லை. தள்ளாடியபடியே மீண்டும் குருவிடம் வந்தான் மர்தானா.

தண்ணீர் குடிக்க அனுமதி மறுத்ததைக் குருவிடம் சொன்னான். களைத்துப் போய் கீழே உட்கார்ந்து விட்டான் மர்தானா.

உடனே குரு, மர்தானா கவலைப்படாதே. நீ உட்கார்ந்துக் கொண்டிருக்கும் இடத்திலேயே ஒரு நீரூற்றைத் தோண்டு என்றார். சத்குரு கூறியபடியே மர்தானா தோண்டினான். தண்ணீர் பீறிட்டு வந்தது. அதைக் குடித்து அவன் தாகம் தீர்த்துக் கொண்டான்.

தண்ணீர் தர அனுமதிக்காத பக்கிரி, இருந்த இடத்திலிருந்தே நீரூற்று தோண்டியதையும், நிலத்து நீர் பீறிட்டு வந்ததையும், அவன் தண்ணீர் குடித்து தாகம் தணிந்து கொண்ட காட்சியையும் பார்த்தான். அப்போது மர்தான்ா தோண்டிய நீரூற்றிலே இருந்து வேகவேகமாக தண்ணீர் பீறிட்டு வந்ததையும், அதே நேரத்தில் அவனுடைய ஊற்றில் தண்ணீர் குறைந்து கொண்டே பூமியுள்ளே சென்று கொண்டிருந்ததையும் பக்கிரி கண்டு கோபம் கொண்டான். உடனே, தனது நீரூற்றருகே இருந்த ஒரு பாறையை அவன் மர்தானா நீரூற்றை நோக்கி உருட்டி விட்டு விட்டான். இதைக் கண்ட மர்தானா அலறிக் கொண்டு குரு நானக்கிடம் ஓடி வந்தான்். அவர் இதையெல்லாம் புன்முறுவலோடு பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அந்தப் பாறை வெகு வேகமாக உருண்டோடி வரவே, உடனே சத்குரு தனது கையை மேலே உயர்த்தினார். அவ்வளவு தான்் வேகமாக உருண்டோடி வந்த அந்தப் பாறை அப்படியே நின்று விட்டது. நகரவில்லை. அந்தப் பாறை மீது குருநானக் கை அடையாளமும் அப்படியே பதிந்திருந்தது.

பக்கிரி இந்தக் காட்சியைப் பார்த்தான். அப்படியே வியந்து நின்றுவிட்டான். எவ்வளவு பெரிய பாறையை நாம் உருட்டி விட்டோம். அது எவ்வளவு வேகமாக உருண்டோடி வந்தது. அந்தப் பாறையைத் தனது கையை உயர்த்தி அப்படியே தடுத்து நிறுத்தி விட்டாரே அவர் யார்? என்று திகைத்து நின்றான்.