பக்கம்:மகான் குரு நானக்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

மகான் குருநானக்


எனவே, அந்த மனிதர் சாதாரணமானவர் அல்லர். ஏதோ ஒரு பெரிய மகானாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணிய அந்தப் பக்கிரி, குன்றின் உயரத்திலே இருந்து கீழே இறங்கி ஓடி வந்தான். சத்குருவிடம் வந்து பணிந்து நின்றான். 'என்னை மன்னித்து விடுங்கள் மகானே என்று அவர் கால்களைப் பற்றிக் கொண்டு கதறினான். சத்குரு நானக் அவனது அழுகுரலைக் கேட்டு மன்னித்தார்.

உடனே பக்கிரி, இறைஞானியே, தெய்வீகச் சக்தியைப் பெறுவது எப்படி? என்றான்.

அதற்கு சத்குரு 'அன்பனே, நாம் ஒவ்வொருவரும் தன்னலத்தை மறக்க வேண்டும். உண்மை நெறியில் வாழ வேண்டும். நமக்கெலாம் ஒரு கடவுள் உண்டு. அந்த இறைவனை நாள்தோறும் வணங்கித் தியானம் செய்ய வேண்டும். அதுவே தேய்வீகச் சக்தியைப் பெறும் வழி" என்று அந்தப் பக்கிரிக்கு ஞானத்தைப் போதித்தார்.

சத்குரு நானக்கும், சீடர்களும், நேராக பெஷாவர் நகர் அருகிலிருக்கும் கோரக்ஹதி என்னும் இடத்திற்குச் சென்று, அங்கே இருந்த யோகிகளுடன் கலந்துரையாடிய பின்பு மீண்டும் தங்களது ஞானப் பயணத்தைத் துவங்கி நடந்தார்கள்.