பக்கம்:மகான் குரு நானக்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

மகான் குருநானக்


பறந்து வந்து, சத்குருவை விட தான் சக்தி பெற்றவன் என்ற எண்ணத்தை அவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு, மக்களுக்கு தனது சக்தி குருநானக்கை விட ஆற்றல் பெற்றது என்பதையும் மெய்ப்பிக்க எண்ணினார்.

குருநானக் ஸ்ரீநகரில் கூடி தன்னை வரவேற்ற மக்களுக்குக் காட்சி தந்து, ஞான வழிபாடு செய்வதை கூட்டம் கூட்டமாய் கூடி நின்று மக்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

அந்த நேரத்தில் பிரம்மதாஸ் என்ற அந்தப் பண்டிதன் தன்னுடைய பறக்கும் கம்பளத்தில் ஏறி குருநானக் உபதேசம் செய்திடும் இடத்திற்கு வந்தார்.

கூட்டம் கூட்டமாய் அங்கே திரண்டிருந்த மக்களைப் பார்த்து, "எங்கே உங்களுடைய குரு? அவருக்காகக் காத்துக் கொண்டிருக்கிறீர்களா?” என்று மனக்கர்வத்தோடும், ஆணவக் குரலோடும் அவர் கேட்டார்.

உடனே கூட்டத்தில் இருந்த ஒருவர் சத்குரு நானக் இதோ உட்கார்ந்திருக்கிறார் என்று அவரைச் சுட்டிக் காட்டினார்.

எங்கே, எங்கே?' என்று மீண்டும் மீண்டும் அந்தப் பண்டிதர் கேட்டார். -

கோபம் கொண்ட ஏனய்யா பண்டிதரே. உமக்குக் கண் தெரிகிறதா? இல்லையா? இதோ அந்த மகான் உட்கார்ந்திருப்பதைப் பாரும் என்று குருவைக் காட்டினார்கள்.

உண்மையிலேயே பண்டிதரால் சத்குருவைப் பார்க்க இயலவில்லை. சரி சரி, சத்குருவைப் பார்க்க வந்ததே எனது தகுதிக்குக் குறைவுதான் என்று கூறியவாறே மீண்டும் வீடு சென்றிட தனது பறக்கும் கம்பளத்தருகே வந்து, அதைப் பறந்து போகுமாறு உத்தரவிட்டார்.

கம்பளம் ஓர் அங்குலம் கூட நகரவில்லை. பண்டிதர் தனது மாய மந்திர சக்தி அனைத்தையும் பயன்படுத்திப் பார்த்தார். கம்பளம் பறக்கவில்லை.

கூடியிருந்த மக்கள் என்னய்யா பண்டிதரே, கம்பளம் பறக்க மறுக்கிறது என்று கூச்சல் போட்டார்கள். பண்டிதர் கூடியிருந்த