பக்கம்:மகான் குரு நானக்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

71


மக்கள் முன்பு அவமானப்பட்டார். எதிர்பாராமல் ஏற்பட்டு விட்ட இந்த அவமானத்தை எண்ணி அவர் மனம் கொதித்தார். எனவே, அந்த இடத்தை விட்டுக் கால்நடையாகவே பண்டிதர் தனது வீடு போய்ச் சேர்ந்தார்.

ஸ்ரீநகர் மக்களுள் முக்கியமான பண்டிதரது நண்பர்கள். அன்று மாலையே அவரது வீட்டிற்குச் சென்று அவருக்கு உண்டான கேவலத்தை குறித்து கேட்டார்கள், வருந்தினார்கள் அவர்கள்.

அப்போதுதான் பண்டிதர், தன்னைத் தேடி வந்த முக்கியமான நண்பர்களைப் பார்த்து, குருநானக் எப்படிப்பட்டவர் என்ற விவரத்தை விசாரித்தார். நானக் தெய்வீகச் சத்தியை வந்தவர்கள் பண்டிதரிடம் கூறினார்கள்.

குருநானக்கைப் பற்றிய ஞானப் பெருமைகளை, அற்புதச் சக்திகளைக் கேட்டுக் கொண்ட பண்டிதர். உடனே சத்குரு தங்கியிருந்த இடத்திற்கு விரைந்து சென்றார். பண்டிதரைக் கண்ட குருபிான் அவரைப் பார்த்து, 'அன்பரே' என்று புன்முறுவலோடு கூப்பிட்டார்.

சத்குருவினுடைய கனிவானக் குரலைக் கேட்ட பண்டிதர், அவர் காலடியிலே கதறி விழுந்து என்னை மன்னித்து அருள் புரிக' என்றார்.

'அருளாளரே, நேற்று என்னால் ஏன் தங்களைப் பார்க்க முடியவில்லை?' என்ற விவரத்தைக் கேட்டார்.

அதற்கு சத்குரு, 'நேற்று உன் கண்களைக் கர்வம் என்ற இருள் மூடிக் கொண்டது. அதனால் என்னைப் பார்க்க முடியாது போயிற்று. உனது கம்பளத்தில் பறக்கும் சக்தி இருந்ததால், நீ தெய்வச் சக்தி உடையவன் என்ற அகம்பாவம் கொண்டாய். மாயாஜாலத்தில் பறப்பதனால் நீ உயர்ந்தவனா? தெய்வத் தன்மை உடையவனாக முடியுமா? ஈக்களும், கொசுக்களும் கூடத்தான்் பறக்கின்றன. அதனால், அவை உயர்ந்தவை ஆகிவிடுமா?' என்று குருநானக், பண்டிதரைப் பீடித்திருந்த அகம்பாவ உணர்வை, ஆணவத் திமிரை, மனக்கர்வ மமதையை கனிவோடு அகற்றி ஞானத்தை அவர் மனதிலே உருவாக்கினார்.