பக்கம்:மகான் குரு நானக்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

73


கருத்துக்கள் ஒவ்வொன்றையும் திபெத்திய மக்களுக்கு உபதேசம் செய்து விட்டு, அங்கிருந்து கைலாச மலையின் வழியாக மானசரோவர் வந்தடைந்தார்.

மானசரோவரில் குருநானக்!

மானசரோவரிலும், கைலாச மலையிலும் தவம் செய்து கொண்டிருந்த ஞான யோகிகள், மாமுனிவர்கள் பலர். சத்குரு நானக் வருவதை அறிந்து, அவரை அன்பு தவழ வரவேற்று, வருக வருக என்ற மகிழ்ச்சி ஒலிகளை எழுப்பினார்கள். மானசரோவர் மாமுனிவர்கள் நானக் செய்த புதிய மத உபதேசங்களைக் கேட்டு உற்சாகமடைந்தார்கள்.

பிரயாகையில் சத்குரு:

பிறகு அங்கிருந்து குருநானக் சீடர்களுடன் அலகாபாத் நகர் வந்தார் அலகாபாத் நகரில் கங்கை, யமுனை, சரஸ்வதி என்ற மூன்று பேராறுகள் கூடும் இடத்தைக் கண்டுகளித்தார். சத்குரு அலகாபாத் நகர் வந்த தினம் சூரிய கிரகண நாளாகும். அன்று லட்சக்கணக்கான மக்கள் நதிகளில் நீராடுவார்கள். நதிகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் குளிக்கும் காட்சி கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். ஆற்றுக் குளியலாடிய மக்கள், அங்கேயே இறை வழிபாடுகளைச் செய்து மகிழ்வர்.

இவ்வாறு மக்கள் நீராடி, அவரவர் பழக்க வழக்கப்படி இறைவழிபாடுகளைச் செய்து கொண்டிருக்கும் நேரத்தில், ஒரு போலிச் சாமியார் தன்முன் ஒரு மேசையைப் போட்டுக் கொண்டு, கண்களை மூடிக் கொண்டு தியானத்தில் இருந்தார்.

அதைக் கண்ட அலகாபாத் யாத்ரிகர்கள் அந்த மேசை மேலே காசுகளைப் போட்டுச் செல்வார்கள். ஒவ்வொரு முறையும் காசு மேசை மீது விழும் ஓசையைக் கேட்டதும் போலிச் சாமியார் தனது கண்களைத் திறந்து பார்ப்பார். பிறகு, அந்தக் காசுகளை எடுத்துத் தனது பையில் போட்டுக் கொள்வார். மறுபடியும் கண்களை மூடிக் கொண்டு தியானத்தில் ஆழ்ந்து விடுவார்.

போலிச்சாமியார் செய்யும் இந்த வேடிக்கைக் காட்சியை, சத்குரு நானக்கும் அவரது சீடர்களும் நீண்ட நேரம் கவனித்துக்