பக்கம்:மகான் குரு நானக்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

79



மர்தானா நேற்று உனக்கு பசி எடுத்தது. தேவையேற்பட்ட போது உண்டாய். அதனால் அது இனித்தது. இப்போது ஆசையேற்பட்டதால் தின்றாய். அதனால் கசந்தது இல்லையா? என்றார் குரு.

குருதேவா என்னால் கசப்பைத் தாங்க முடியவில்லை. பேச முடியவில்லை என்றான் மர்தானா.

கவலைப் படாதே. ’சத்நாம்’ என்று சொல். கசப்பு மறைந்து விடும் என்றார் குரு.

அவ்வாறே கூறினான் மர்தானா. 'சத்நாம் என்று மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டே இருந்தான் அவன், மறைந்தது கசப்பு. அவன் முகம் ஒளி பெற்றது. மகிழ்ச்சியடைந்தான் மர்தானா.