பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

அறத்தின் குரல்

வந்த காரியம் யாது? அதற்கு நான் ஏதாவது உதவி செய்ய இயலுமாயின் பெரும் பேறு உடையவன் ஆவேன்” -என்றான் பாண்டியமன்னன்.

“கன்னியைக் கண்ணுற்று ஆட வேண்டி இங்கே பாண்டி. நாடு வந்தேன்” -என்று விசயன் மறுமொழி கூறினான்.

“என்ன? கன்னியையா?−”

“இல்லை! இல்லை! நான் கூறியதாவது, கன்னியாகுமரிக் கடலில் நீராடிச் செல்வதற்கு - என்ற அர்த்தத்தில்.”

“ஓகோ! அப்படியா!” பாண்டியனும் அர்ச்சுனனும் ஏககாலத்தில் சிரித்தனர். தீர்த்த யாத்திரைக்காக வந்தவன் என்பதைத்தவிர வேறு ஏதும் தன்னைப் பற்றிக் கூறவில்லை அவன். பாண்டிய மன்னன், ‘மதுரையிலிருக்கும் வரை தாங்கள் என் அரண்மனை நந்தவனத்திலேயே ஆசிரமம் அமைத்துக் கொண்டு தங்கியிருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தரும்’ என்று வேண்டிக் கொண்டான். அர்ச்சுனனும் அவனோடு வந்த வேறு சில யாத்திரிகர்களும் அவ்வாறே தங்கியிருப்பதற்குச் சம்மதித்தார்கள், அர்ச்சுனனும் அவனைச் சேர்ந்தவர்களும் தங்கியிருந்த அந்த நந்தவனம் அரண்மனைப் பெண்கள் பொழில் விளையாடுவதற்குரிய இடம். பாண்டியன் மகள் சித்திராங்கதையும் அவளைச் சேர்ந்தவர்களும் அந்தப்புரத்து மகளிரும் அங்கே பொழுது போக விளையாட வருவது வழக்கம்.

அர்ச்சுனன் அங்கே தங்கிய நாளில் மாலைப் போதில் சித்திராங்கதை தன் தோழிகளோடு, பூப்பந்து விளையாடுவதற்காகவும், மலர் கொய்வதற்காகவும் அந்தப் பொழிலுக்கு வந்தாள். அந்தச் சமயத்தில் அர்ச்சுனனோடு வந்தவர்கள் எங்கோ வெளியே சென்றிருந்ததனால் ஆசிரமத்தில் அவன் மட்டுமே தனியே இருந்தான். சித்திராங்கதையின் அழகு அவனை அனுராகம் கொள்ளச் செய்தது, தோழிகளை விட்டுப் பிரிந்து தனியே மலர் கொய்து கொண்டிருந்த அவளுக்கு முன்னால் யாரோ நடந்து வரும் காலடியோசை