பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/200

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
198
அறத்தின் குரல்
 

அதிர்ச்சியூட்டக் கூடிய நிகழ்ச்சியாக இருந்தது அவர்களுக்கு இது. எல்லோரையும் பணிந்து வணங்கி ஆசி பெற்றுக் கொண்டு தருமனும் அவன் தம்பிகளும் திரெளபதியும் புறப்பட்டபோது, இந்த உலகத்தை இரட்சிக்கும் தரும் தேவதையே தன் பரிவாரச் சுற்றங்களுடன் வனத்திற்குப் போவது போல உணர்ந்தார்கள் அங்கிருந்தவர்கள்.

நாடு நகரங்களில் பாண்டவர்கள் திரெளபதியோடு வனவாசம் சென்றிருக்கிறார்கள் என்ற செய்தி பரவிய போது தங்கள் நெருங்கிய உறவினர்களை வெகு தொலைவில் பிரிய விட்டு விட்டாற் போலக் கலங்கினர் மக்கள். எங்கும் பாண்டவர்கள் பிரிவு ஒரு விதமான சோக உணர்வை பரப்பியிருந்தது. ஊர் உலகத்தின் துயர் உணர்வைச் சிறிதும் பொருட்படுத்தாமல் மகிழ்ச்சியோடு காட்டிற்குச் சென்றனர் பாண்டவர். அவர்கள் மனங்களிலே நிறைந்திருந்த மகிழ்ச்சி கானகத்திலும் குன்றவில்லை.

(சபாபருவம் முற்றும்)