பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

207


“ஏன்? சமயம் என்ன? இப்போதே அந்த அருளைச் செய்து விட்டால் போகிறது.”

“ஆமாம்! ஆமாம் அருள் செய்ய வேண்டிய சமயம் இப்போதே வந்துவிட்டது. தவம் செய்து கொண்டிருப்புவனைக் கொன்று தொலைத்து விடுவதற்காக முகன் என்னும் அசுரனை ஏவி விட்டிருக்கிறான் துரியோதனன். நாம் போனால்தான் பக்தனை உயிரோடு காப்பாற்றலாம்.”

“புறப்படுங்கள்! இப்போதே போகலாம்.”

“போக வேண்டியதுதான். ஆனால் ஒரு நிபந்தனை தேவி!”

“என்ன நிபந்தனை?”

“நான் வேடனைப் போன்ற மாற்றுருவத்திலும் நீ வேட்டுவச்சியைப் போன்ற மாற்றுருவிலுமாகச் செல்ல வேண்டும்.”

“ஏன் அப்படி?”

“அர்ச்சுனனை எதிர்க்க வந்திருக்கும் முகாசுரனைக் கொன்று பின்பு அவன் தவ வலிமையைச் சோதித்த பின் அருள் செய்ய மாறுவேடத்தில் போவதே வசதியாக இருக்கும்.”

“சரி, அவ்வாறே போகலாம்”

உமை சம்மதித்தாள். மறுவிநாடி கைலாச சிகரத்திலிருந்து ஒரு வேடனும் வேட்டுவச்சியும் மலைச்சாரலை நோக்கி இறங்கிச் சென்றார்கள். வேடனாகச் சென்ற சர்வேசுவரன் வில்லும் அம்பும் ஏந்தியிருந்தான். வேட்டுவச்சியாகச் சென்ற பராசக்தி முருகனைக் குழந்தையாக்கி இடுப்பிலே தூக்கிக் கொண்டு சென்றாள். சிவகணங்கள் வேட்டுவக்குலத்து மக்களைப் போல மாறி அவர்களைப் பின்பற்றின. அவர்கள் கைலாச சிகரத்தைக் கடந்து கீழே அர்ச்சுனன் தவம் செய்து கொண்டிருந்த இடத்தை வந்தடைந்த போது, பன்றி வடிவில் வந்திருந்த