பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

217

கருத்துக்கள் எனக்கு எச்சரிக்கையாக அமைய வேண்டும்.” என்று அர்ச்சுனன் கேட்டான். மாதலி, உடனே நிவாதகவசர்களைப் பற்றித் தனக்குத் தெரிந்திருந்த விவரங்களை எல்லாம் கூறத் தொடங்கினான்.

“நிவாதகவசர்கள் கண்டவர் பயப்படும்படியான தோற்றத்தை உடையவர்கள். இடி முழக்கம் போலப் பேசுகிற சினம் மிக்க சொற்களை உடையவர்கள். மலைக் குகை போன்ற பெரிய வாயை உடையவர்கள். நெருப்புக் கோளங்களோ எனப் பார்த்தவர்கள் அஞ்சி நடுநடுங்கும் விழிகனள உடையவர்கள். போர் எனக் கேட்டதுமே பூரித்து எழுகின்ற தோள்களை உடையவர்கள். மகாவீரர்கள். ஈட்டி , மழு, வளைதடி, வில், வாள் முதலிய படைக் கலங்களைக் கொண்டு போரிடுவதில் நிகரற்றவர்கள். அவர்களை வெல்ல உலகில் எவராலும் முடியாதென்று மற்றவர்களை எண்ணச் செய்பவர்கள்.” மாதலி இவ்வாறு கூறி வந்த போதே தேர் தோயமாபுரத்தை அடைந்து எல்லைக்கு வெளியில் நின்றது. தங்களோடு வந்திருந்த சித்திரசேனனை நிவாதகவசர்களிடம் தூதாக அனுப்பினர் அர்ச்சுனனும் தேர்ப்பாகன் மாதலியும். சித்திரசேனன் அர்ச்சுனன் போருக்கு வந்திருக்கும் செய்தியை உரைப்பதற்காகத் தோய்மாபுரத்திற்குள்ளே சென்றான்.

மாதவி தேரைச் செலுத்தும்போது தேர்ச்சக்கரங்கள் உருண்ட ஓசையும் வில்லின் நாணை இழுத்து வளைத்து அர்ச்சுனன் உண்டாக்கிய ஒலியும் தோயமாபுர மக்களாகிய அசுரர்களின் செவிகளைக் கிடுகிடுக்கச் செய்தன. ஆனால் அவர்கள் அஞ்சவில்லை. சித்திரசேனன் நகருக்குள் நுழைந்து நிவாதகவுசர்களிடையே அர்ச்சுனன் போருக்கு வந்திருப்பதைக் கூறினான். அவர்கள் இதைக் கேட்டு இடியடி யென்று சிரித்தனர்.

“இந்த நகரத்து வீரர்களாகிய புலிகளுக்கு நடுவே ஒரு பூனை போருக்கு வந்திருக்கிறது போலும் வரட்டும் வரட்டும், அது சாவதற்குத் தான் வந்திருக்கிறது. நாட்டையும்,