பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

255


“தத்தம் குல ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பது”

“முனிவர்குலம் எல்லாம் வணங்கக்கூடிய கடவுள் யார்?”

“திருத்துழாய் மாலையணியும் முகுந்தன்”

“நங்கையர்க்கு இயல்பான குணம் யாது?”

“நாணம்.”

“பொருள் மிகுந்த செல்வர்களுக்கு பாதுகாப்பு என்ன?”

“தானம்.”

“இரண்டு செவிகளுக்கும் இனியவை யாவை?”

“குழந்தைகளின் மழலை மொழிகள்.”

“நிலைத்து நிற்பது எது?”

“நீண்ட புகழ்.”

“கற்கத்தக்க கல்வி யாது?”

“கசடறக் கற்கும் கல்வி “ ‘எல்லாவற்றினும் அற்பமானது என்ன?”

“மற்றொருவரிடம் ஒரு பொருளைக் கேட்டுக் கையேந்தி வாங்குவது.”

எல்லாக் கேள்விகளுக்கும் மிக விரைவாக மறுமொழி கூறி முடித்து விட்டான் தருமன். கேள்விகளுக்கு விடை கூறி முடித்தவுடன் அவன் முன் எமன் தோன்றினான். தருமன் தந்தையை வணங்கினான். எமன் தருமனை வாழ்த்தி அவனுக்கு ஒரு மந்திரத்தைக் கூறி, “இந்த மந்திரத்தைக் கூறினால் உன் தம்பியர் நால்வருள் யாராவது ஒருவரைப் பிழைக்கச் செய்யலாம்” -என்றான்.

உடனே தருமன் அப்படியே கூறி, சகாதேவனை மட்டும் உயிர் பெறச் செய்தான். அது கண்ட எமன், “ஏன் இவனை மட்டும் உயிர் பெறச் செய்தாய்? மற்ற மூவர் மேலும் உனக்கு அன்பில்லையா?” -என்று கேட்டான்.

“தந்தையே! நாங்கள் நால்வரும் குந்தியின் மக்கள், இவன் மாத்திரியின் மகன். குந்தி வயிற்றில் தோன்றிய முறைக்கு நான்