பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

318

அறத்தின் குரல்


“ஐந்து ஊர்களின்றி ஐந்து வீடுகளைக் கொடுத்தாலும் அவர்கள் மாட்டேன் என்றா சொல்லிவிடப் போகிறார்கள்? ஆனால் இப்போது ஐந்து வீடுகளைக் கூட நான் அவர்களுக்குக் கொடுக்கத் தயாராக இல்லை.”

“கெளரவர் தலைவா! ஐந்து வீடுகளைத் தருவது உனக்கு அவ்வளவு கடினமாக இருக்காது, அவற்றையாவது கொடு!”

“கண்ணா ! உலகம் ஆண்மையும் வலிமையும் உடையவர்களுக்குச் சொந்தம். மற்றவர்கள் அதை அடையவோ, ஆளவோ, முயல்வது பயனற்றது.”

“நல்லது! உன்னுடைய தத்துவ விளக்கம் எனக்குத் தேவையில்லை. முடிவாகப் பாண்டவர்களோடு போர் செய்வதற்காகவாவது இணங்கு. உனக்கு உன்னைப் புரிந்து கொள்ளச் செய்ய அது தான் சரியான வழி. யார் வலியவர், யார் எளியவர்? என்பதைப் போரில் பார்த்து விடுவோம்.”

“நீயா இப்படி வீரமாகப் பேசுகிறாய்? இடைக்குலத்தில் பிறந்து ஆய்ச்சியர்களிடையே சிறுவயதில் நீ உற்ற துன்பங்களெல்லாம் எனக்குத் தெரியாதென்றா நினைத்தாய்? மத்தால் அடிப்பட்டும் உரலில் கட்டுண்டும் எத்தனை எத்தனை வேதனை அடைந்தாய்? இப்போது என்னைப் பாண்டவர்களோடு போருக்கழைக்கும் தூதுவனாக வந்திருக்கிறாய்! நான் போருக்குப் பயந்தவனில்லை. அந்தப் பாண்டவர்களை விட நாங்கள் எந்த வகையில் தாழ்ந்தவர்கள்? ஒரு தாய்க்கும் ஐந்து தந்தைகளுக்குமாகப் பிறந்து ஐவரும் ஒரு பெண்ணை மணந்து கொண்டவர்கள் தாமே பாண்டவர்கள்? அவர்களுக்கு நாடு ஒரு தேடா? ஆள்வதற்கு என்ன தகுதி இருக்கிறது?” இவ்வாறு பலவிதமாகக் கண்ணனையும் பாண்டவர்களையும் தூற்றிக் கொண்டே போனான் துரியோதனன்.

கண்ணன் சிரித்த முகம் மாறாமல் பொறுமையோடு யாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தான். பின்பு விதுரனையும் அழைத்துக் கொண்டு அவனோடு அவன்