பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

356

அறத்தின் குரல்

ஆகிய நால்வரும் முன்னணித் தேர்ப்படையினராக நியமனம் பெற்றனர். அதிராதிபர்களுக்கு அடுத்தபடி பெருந்தேர்களில் இருந்து போர் புரியக்கூடியவர்களுக்கு மகாரதாதிபர்கள் என்று பெயர். சிகண்டி, சாத்தகி, துட்டத்துய்ம்மன், விராடன், தருமன் ஆகிய ஐந்து பேரும் மகாரதாதிபர்களாக நியமனம் பெற்றனர். மகாரதாதிபர்களுக்கு அடுத்த வரிசையில் நின்று போர் செய்யக்கூடியவர்களுக்குச் சமராதிபர்கள் என்று பெயர். சமராதிபர்களுக்கும் அடுத்த வரிசையில் நிற்பவர்களுக்கு அர்த்தரதாதிபர்கள் என்று பெயர். நகுலன், சகாதேவன், கடோற்கசன் ஆகிய மூவரும் அர்த்தரதாதிபர்களாக நியமனம் பெற்றனர்.

இங்கு இவ்வாறு போர் ஏற்பாடுகளும் அணிவகுப்புக்களும் நிகழ்ந்து கொண்டிருந்தபோது முன்பு துரியோதனாதியர் பக்கம் சேருவதாக முடிவு செய்திருந்த பலராமன் திடீரென்று மனம்மாறி “நான் இந்தப் போரில் இருவர் பக்கமும் சேரப் போவதில்லை. இருபக்கமும் எனக்கு வேண்டியவர்கள் இருக்கிறார்கள். ஆகையால் இந்தப் போர் முடிகிறவரை நானும் விதுரனோடு தீர்த்த யாத்திரை போய்விட்டு வரத் தீர்மானித்திருக்கிறேன்” -என்று கூறிவிட்டு விதுரனுடன் புறப்பட்டுவிட்டான். பலராமன் மனம் மாறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவன் கண்ணன். “கண்ணன் பாண்டவர்களுக்கு வேண்டியவனாக இருந்து உதவிகள் புரிந்து வரும்போது நாம் கெளரவர்கள் பக்கம் சேர்ந்து போரிடுவது நல்லதல்ல” -என்றெண்ணியே பலராமன் மனம் மாறினான். பலராமனின் இந்தத் திடீர் மாற்றம் துரியோதனாதியர்களுக்குப் பெருத்த ஏமாற்றத்தையும் பாண்டவர்களுக்கு மிக்க மகிழ்ச்சியையும் கொடுத்தது. தேர்ப்படை, குதிரைப்படை, யானைப்படை, காலாட்படை என்று நான்கு வகையாகப் பிரித்து அணி வகுக்கப் பட்ட பாண்டவர்களின் சேனை ஏழு அக்குரோணி எண்ணிக்கை பெற்றது. அணிவகுப்பு, வரிசை முறைப் பிரிவுகள், எல்லாம்