பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/366

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
364
அறத்தின் குரல்
 

தெரியுமா? மாயா கர்ப்பத்தின் பிறவிதான் மனம். ஜன்மாவே மாயையின் வசத்தாலோ அவசத்தாலோ நிகழ்கிறது. ஜன்மாவின் சிந்தையோ முற்றிலும் மாயையிலேயே மூழ்கித் தோய்ந்து பிறந்தது. மாயையில் மூழ்கிய மனம் மெய்யறிவை மறப்பதும் பயனற்ற ஆசைகளிலும் பாசங்களிலும் மயங்குவதும் இயல்பு. ஆசையையும் பாசத்தையும் மறந்து கடமையைச் செய்வதுதான் ஆத்மாவின் இலட்சியம், ஜன்மாவின் இந்த இலட்சியத்துக்குப் பகைவேறு எங்கும் இல்லை, அதன் சரீரத்துக்குள்ளேயே இருக்கிறது. ஐம்பொறிகளும், அவைகளுக்குப் புலனாகும் விஷயானுபவங்களும், அவற்றை அடக்கியாள்கின்ற மனமும் தான் அந்தப் பகைகள், புலன்களின் விழிப்பும் கொட்டமும் ஒடுங்காத வரை ஆன்மா உறங்கிக் கொண்டுதான் இருக்கும். ஆன்மா விழிப்படைந்து மெய்ப்பொருளை உணர வேண்டுமானால், புலன்கள் செயலோய்ந்து உறங்க வேண்டும். புலன்களின் அஜாக்ரதையால் பாசபந்தங்களைப் போக்கிக் கடமையை நிறைவேறும்படி செய்து கொள்ள வேண்டும்; அது தான் பிறப்பின் மாபெரும் குறிக்கோள்! கடமையை நிறைவேற்றுவதற்குரிய ஞானமாக ஒவ்வொரு ஆன்மாவிலும் பரம்பொருள் நிறைந்திருக்கின்றது பாலிலே நெய்போல மறைந்து நிற்கும் பரமஞானத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விருப்பு வெறுப்பற்ற, பாசபந்தமில்லாத நிலையை அடைவதற்கு இந்த ஞானம் அவசியம். இன்னும் கேள்! உயர்பிரிவினர்களாகிய தேவர்களும், ஞானச்செல்வர்களாகிய முனிவர்களும் கூட உணர்வதற்குத் திண்டாடும் ஓர் மாபெருந் தத்துவத்தை இப்போது இங்கே உன் பொருட்டு நான் உபதேசிக்கிறேன். உன் பிரமையைப் போக்கி அஞ்ஞானத்தை அகற்றி ஞானத்தை உண்டாக்குவதற்காகவே இந்த உபதேசம். சரீரம் பஞ்ச பூதங்களிலிருந்து உண்டானது. அழிந்து பின் பஞ்ச பூதங்களோடு கலக்கப்போவது. ஞானத்தையே சரீரமாகக் கொண்டுள்ள பரம்பொருளின் சக்தியால் வெறும் பூதசரீரமாகிய உடல் இயங்குகிறதே ஒழியத்