பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

375

செய்வதற்கு வா” என்று வீட்டுமன் கூவியழைத்தான். ஒரு சூழ்ச்சியை மனத்தில் பொதிந்து வைத்துக் கொண்டே அவன் இப்படிக் கறினான். சிவேதன் இதை மெய்யென்று எண்ணிக் கொண்டு தன் வில்லைக் கீழே வைத்துவிட்டு, வாளை எடுத்துக் கொண்டு போர் புரிய வந்தான். திடீரென்று வீட்டுமன் வேறோர் வில்லை எடுத்துச் சிவேதனின் தோள் பட்டையைக் குறிவைத்து அம்பைத் தொடுத்தான். அம்பு சிவேதனின் தோள் பட்டையில் ஆழமாகப் பாய்ந்து கையைத் துண்டித்துத் தள்ளிவிட்டது, மனங்குமுறிய சிவேதன் தனக்கு மீதமிருந்த ஒரே கையால் வாளை ஓங்கிக் கொண்டு வீட்டுமனைக் கொல்வதற்காக அவன் மேலே பாய்ந்தான். அதற்குள் வீட்டுமனுடைய வில்லிருந்து இன்னொரு அம்பு புறப்பட்டு விட்டது. இந்த அம்பு சிவேதனின் மார்பிலே தைத்து அவனைக்கொன்று விட்டது. சிவேதன் ஆவிதடுமாறி மண்ணில் வீழ்ந்தான். சூழ்ச்சியினால் வீட்டுமன் அவனைக் கொன்று பழிதீர்த்துக் கொண்டான். இப்படியாக முதல் நாள் போரில் வீரமாகப் போர் புரிந்த உத்தரன், சிவேதன் என்ற இருவரும் பாண்டவர்களுக்கு மேலும் உதவ முடியாமல் மறைந்து அமரராயினர். இவர்கள் இருவருமே விராடனின் மக்கள்.

3. போர் நிகழ்ச்சிகள்

உத்தரன், சிவேதன் என்று முறையே தன் மக்கள் இருவரையும் முதல் நாள் போரிலேயே இழந்த விராட மன்னனை கண்ணன், தருமன் முதலியவர்கள் ஆறுதல் கூறி மனச் சமாதானம் அடையச் செய்தனர். மறுநாள் அதிகாலையிலேயே அதாவது புலரிப் போதிலேயே இரண்டாம் நாள் போருக்கான அறிகுறிகள் விறுவிறுப்பாகத் தொடங்கி விட்டன. கண்ணன் செய்த ஏற்பாட்டின் படி துட்டத் துய்ம்மன் பாண்டவர்கள் சார்பில் படைத் தலைவனாக்கப்பட்டான். இருபுறத்துப்