பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/405

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
403
 

தொடங்கிற்று. ‘திடீரென்று மழை தொடங்கி விட்டதோ?’ எனச் சந்தேகம் கொள்ளுமாறு ‘விர்ர்’ ‘விர்ர்’ ரென்று அம்புகள் இருபுறத்திலிருந்தும் மழை போலக் கிளம்பின, சகுனி சரியான எதிரியிடம் மாட்டிக் கொண்டு விட்டான். சகாதேவன் அவனை வளைத்துக் கொண்டு போர் புரிந்தான். போரில் சகாதேவன் வெல்வானா சகுனி வெல்வானா என்று முடிவு கண்டுபிடிப்பது கஷ்டமாக இருந்தது. நேரமாக ஆக இந்த நிலை மாறியது. சகாதேவன் கை ஓங்கிற்று.

முதலில் சகுனியின் தேர்ப்பாகன் இறந்தான். பின்பு சகுனியின் தேர்க்கொடிகள் அறுந்து வீழ்ந்தன. அடுத்துத் தேரை இழுத்துச் சென்ற குதிரைகள் அம்பு தைத்து வீழ்ந்தன. இறுதியில் சகாதேவனின் அம்புகள் சகுனியின் உடலையும், மார்பையும் கூட விட்டுவைக்கவில்லை. சல்லடைக் கண்களாகத் துளைத்து விட்டன. அம்புகள் தைத்த வலி பொறுக்க முடியாமல் தேரிலிருந்து கீழே குதித்து விட்டான் சகுனி. ‘போர் வேண்டாம், ஆள் பிழைத்தால் போதும்’ என்று கீழே குதித்து ஓடுவதற்கு முயன்ற அவனைச் சகாதேவன் விடவில்லை. சகாதேவனைக் கண்டதுமே சகுனி மிரண்டு போனான். தப்புவதற்கு வழியில்லாத நிலையில் கையில் ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டு அவனை எதிர்த்தான். சகாதேவனும் தன் கையில் ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டு சகுனியை எதிர்த்தான். சகுனியால் சகாதேவனை எதிர்த்துச் சமாளிக்க முடியவில்லை. கதாயுதத்தைக் கீழே போட்டுவிட்டுப் புறமுதுகு காட்டி ஓடி விட்டான். தோற்று ஓடுகிற அந்தக் கோழை மனிதனைப் பார்த்து இகழ்ச்சி தோன்றச் சிரித்துக் கொண்டே கதாயுதத்தைக் கீழே வைத்தான் சகாதேவன். அதே சமயத்தில் போர்க்களத்தின் மற்றோர் புறத்தில் வீமனுக்கும் துரியோதனனுக்கும் பயங்கரமான முறையில் போர் நடந்து கொண்டிருந்தது. துரியோதனனும் அவனைச் சேர்ந்த துணையரசர்கள் பலருமாக ஒன்று சேர்ந்து கொண்டு வீமனை எதிர்த்தார்கள். வீமனோ தனி ஆளாக நின்று அவர்களை வளைத்துப் போர்