பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

410

அறத்தின் குரல்

வோமாக.” -திரிகர்த்தனுடைய சபதத்தைக் கேட்டதும் துரியோதனனுக்குச் சிறு அளவில் நம்பிக்கையும் திருப்தியும் ஏற்பட்டது. அடுத்து வேறு பல சிற்றரசர்களும் துரியோதனனுக்கு ஆதரவாகச் சபதம் செய்தனர். துரோணர் விருப்பு வெறுப்புக்களைக் களைந்து வீற்றிருப்பவர் போல் அமைதியாக வீற்றிருந்தார். குறைகுடம் தளும்புவது தானே வழக்கம்; செயலில் ஆண்மை குறைந்தவர்கள் சொல்லில் முதலியவர்கள் அந்த இனத்தைச் சேர்ந்தவர்கள். எனவேதான் தருமனைச் சிறை செய்வதை சுலபமான காரியமாக நினைத்தும் பேசியும் ஆரவாரித்தனர். துரியோதனனும் அந்த வெற்று ஆரவாரத்தை நம்பி விட்டான்.

2. சூழ்ச்சியின் தோல்வி

விதியும், நியதியும், துரோகத்தோடும், வஞ்சகத்தோடும், ஒத்துழைப்பதென்பது என்றும் இல்லை. சூழ்ச்சியின் அடைத்த கதவுகளை விதியின் செயல் எங்காவது ஒரு மூலையில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் உடைத்துத் திறந்து காட்டிவிடுகிறது. துரியோதனாதியர்கள் அன்று அந்த நள்ளிரவில் தருமனைச் சிறைப்பிடிப்பதற்காகச் செய்த சூழ்ச்சியின் கதியும் அப்படித்தான் ஆயிற்று. பாண்டவர்களின் ஒற்றர்கள் அன்றிரவு துரியோதனனுடைய பாசறையில் நடந்த சதிக் கூட்டத்தின் விவரங்களை ஒன்று விடாமல் அறிந்து கொண்டு போய்த் தருமனிடம் கூறிவிட்டார்கள். பன்னிரண்டாம் நாள் போரில் தன்னைக் கைது செய்து சிறைப்பிடிக்கப் போவதையும், அதற்காகத் தன் தம்பியர்களான வீமனையும் அர்ச்சுனனையும் தன்னை விட்டுத் தொலைவில் பிரித்துச் செல்லப் போவதையும் தருமன் நன்றாக உணர்ந்து கொண்டான். செய்தி தெரிந்ததுமே கண்ணன், அர்ச்சுனன், வீமன், அபிமன்னன் முதலிய முக்கியமானவர்களை அழைத்து அவர்களிடம் எல்லா