பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/474

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
472
அறத்தின் குரல்
 

போரில் கர்ணன் தோற்றான். அந்தச் சமயத்தில் உண்மையாகவே சூரியன் அஸ்தமித்தான். எனவே இருசாராரும் போரை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் துரியோதனனுக்கு அன்று இருட்டிய பின்பும் கூடப் போர் வெறி தணியவில்லை.

“ஏ! கண்ணா! சற்று நேரத்துக்கு முன் நீ பகலை இரவாக மாற்றிச் சூது புரிந்தாய். இப்போது நான் இரவைப் பகலாக மாற்றித் தொடர்ந்து நிறுத்தாமல் போர் செய்யப் போவதைப் பார்” என்று கூறிக்கொண்டே துரியோதனன் நூற்றுக்கணக்கான தப்பந்தங்களை ஏற்றிக் கொண்டு வருமாறு தன் வீரர்களுக்குக் கட்டளையிட்டான். துரியோதனன் ஏவற்படி அவன் படைகள் தீப்பந்தங்களைக் கொளுத்தி ஒளி உண்டாக்கின. தொடர்ந்து போரிடத் தயாராக நின்றன. எதிரிகள் தீப்பந்தங்களின் உதவியால் இரவிலும் போரிட்ட முற்படுவதைத் தருமன் கண்டான். உடனே, ‘நீங்களும் தீப்பந்தங்களைக் கொளுத்திக் கொண்டு தொடர்ந்து போரிடத் தயாராகுங்கள்“ - என்று அவனும் தன் படைகளுக்குக் கட்டளையிட்டான். போர் வழக்கத்துக்கு முற்றிலும் மாறாக, இரவிலும் அன்று போர் நடந்தது. தீப்பந்தங்களின் உதவியால் இருதரப்பினரும் ஆத்திரமும் சினமும் கொண்டு போரிட்டனர். அர்ச்சுனனுக்கும் . கர்ணனுக்கும் தொடர்ந்து நடந்த போரில் கர்ணன் இருமுறை தோற்றோடினான். கிருதவன்மனுக்கும் தருமனுக்கும் நேரடியாக நடந்த போரில் தருமன் வென்றான். சல்லியனைச் சதாநீகனும், அசுவத்தாமனைக் கடோற்கசனும், துரோணரைத் துட்டத்துய்ம்மனும் வென்றனர். இந்த வெற்றிகள் எல்லாம் பாண்டவர் பக்கமே நிகழ்ந்ததைக் கண்டு துரியோதனாதியர் மனங்குமுறினர். துரியோதனருக்கு உதவி செய்வதற்காக வந்திருந்த அலாயுதன் என்னும் அரக்கன் வீமனை எதிர்ப்பதற்காகத் தனது படைகளோடு புறப்பட்டு விட்டான்.

“துரியோதனருக்கு வெற்றியுண்டாக்குவதற்காகவே நான் வருகிறேன். உங்கள் படைகளை ஒரு நொடியில் புறமுதுகு