பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

475

துரியோதனின் வேண்டுகோளை மறுக்கமுடியாமல் தனக்கு இந்திரன் கொடுத்த வேலை எடுத்துக் கடோற்கசனின் மார்பைக் குறிவைத்து எறிந்தான் கர்ணன். வலிமை வாய்ந்த அந்த வேல் கடோற்கசனுடைய மார்பைப் பிளந்து கீழே தள்ளியது. பயங்கரமாக அலறிக் கொண்டு மலைபுரண்டு விழுவது போல் கீழே விழுந்தான் அவன். அவனைக் கொன்று முடித்த பெருமிதத்தோடு அந்த வேல் இந்திரனிடம் சென்றது. கீழே விழுந்து துடிதுடித்த கடோற்கசனின் உடல் சிறிது நேரம் கழித்து உயிர் நீங்கி வெற்றுடம்பாகக் கிடந்தது. கடோற்கசன் இறந்த செய்தி பாண்டவர்களுக்கு எட்டியது. அவர்கள் அவன் மரணத்துக்குப் பெரிதும் வருந்திக் கண்ணீர் சிந்தினர். சர்வேசுவரனின் அம்சமாகிய கண்ணபிரானுக்கு மட்டும் ஒரே ஒரு வகையில் திருப்தி ஏற்பட்டது.

‘நல்லவேளை! கர்ணன் இந்திரனிடம் பெற்று வைத்துக் கொண்டிருந்த அந்த வேல் கடோற்கசனோடு போய் விட்டது. இல்லையானால் கர்ணன் அதை அர்ச்சுனனைக் கொல்வதற்காக உபயோகப்படுத்தி இருப்பான்” என்று கூறிப் பாண்டவர்களைத் தேற்றினான் கண்ணன். கடோற்கசன் இறக்கும்போதே இரவு வெகு நேரத்துக்கு மேல் ஆகியிருந்தது. அவன் இறந்ததும் சிறிது நேரம் இருதரப்புப் படைகளும் அமைதியாக இருந்தன. பின்பு மீண்டும் போர் தொடங்கியது. கடுமையாக நிகழ்ந்த அந்தப் போரில் பாண்டவர்கள் பக்கத்தைச் சேர்ந்த துருபத மன்னனையும், விராடராசனையும் துரோணன் கொன்று விட்டான். துருபத மன்னனின் புதல்வனும் மகாவீரனுமாகிய துட்டத்துய்ம்மன் துரோணரைப் பழிவாங்கக் கருதினான். ‘நாளைப் போரில் எப்படியும் துரோணரைக் கொல்லாமல் விடமாட்டேன்’ - என்று சபதம் செய்தான் அவன். ‘பின்பு அதே இரவில் தொடர்ந்து நடந்த போரில் அர்ச்சுனன் துரோணரை ஒரு முறை வென்றான். துரோணர் அவனுக்குத் தோற்றுப் புறமுதுகு காட்டி ஓடினார். பாண்டவர்களின் உற்ற நண்பனான சாத்தகி துரியோதனனைத் தோற்கடித்து ஓட ஓட