பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/484

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
482
அறத்தின் குரல்
 

கொன்றிருக்கிறான். இது நியாயமில்லை, வஞ்சகம்! அக்கிரமம், நேருக்கு நேர் என் தகப்பனாரோடு வாட்போரோ, விற்போரோ, செய்திருந்தால் உங்களால் அவரை வென்றிருக்க முடியுமா? துட்டத்துய்ம்மன் என் தந்தையிடமே விற்கலை கற்றான். அந்தத் துரோகியோ, இப்போது சிறிதளவும் நன்றியுணர்வின்றி என் தந்தையையே வஞ்சகமாகக் கொன்று விட்டான். ஆனாலும் துட்டத்துய்ம்மன் மட்டும் இதற்கு முழுப்பொறுப்பாளி இல்லை. எல்லா வஞ்சகத்துக்கும் காரணமானவர்கள் பாண்டவர்களே. நான் அவர்களைச் சும்மா விடப் போவதில்லை. இதோ என்னிடமிருக்கும் இந்த நாராயணாஸ்திரத்தை எய்து அவர்களை சர்வ நாசம் செய்து விடுகிறேன்” என்று கூறிக்கொண்டே விழிகள் சிவக்கப் புருவம் வளைய நாராயணாஸ்திரத்தை கையிலெடுத்து விட்டான் அசுவத்தாமன். நாராயணாஸ்திரத்தை எடுத்தவுடன் கண்ணனுக்குப் பகீரென்றது. அந்த அஸ்திரத்தை அவன் பாண்டவர்கள் மேல் எய்துவிட்டால் பாண்டவர்கள் பூண்டோடு அழிந்துவிடுவார்கள் என்பதில் ஐயமே இல்லை. கையில் ஆயுதங்களின்றி முனிவர்களைப் போல அமைதியாக நிற்பவர்களைத் தவிர மற்ற எல்லோரையும் கொல்லும் சக்தி வாய்ந்தது அந்த அஸ்திரம், பாண்டவர்களைக் காப்பற்ற வேண்டுமானால் அவர்கள் எல்லோரையும் வெறுங்கையர்களாய் ஆயுதமின்றி நிற்கச் செய்ய வேண்டுமென்று நினைத்தான் கண்ணன். உடனே பாண்டவர்களை அழைத்து யோகியர்களைப் போலச் சாந்தமாக வெறுங்கையுடன் நிற்குமாறு கூறினான் வீமன் ஒருவனை மட்டும் ஆயுதத்தோடு இருக்கச் செய்தான். வீமனைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் ஆயுதங்களின்றி அமைதியாக நின்றனர். அசுவத்தாமன் கோபம் பொங்க வில்லை வளைத்து அதில் நாராயணாஸ்திரத்தைப் பொருத்தித் தொடுத்தான். அந்த அஸ்திரம் ஆயுதமில்லாமல் வெறுங்கையோடு நின்றவர்களையெல்லாம் விட்டு விட்டு வீமன் மேல் பாய்ந்தது. நாராயணாஸ்திரம் வில்லிலிருந்து கிளம்பும்போது ஒன்றாகத் தோன்றினாலும்