பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/492

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

490

அறத்தின் குரல்

உள்ளூர அவனுக்கு வெட்கமாக இருந்தது. “துரியோதனா பயப்படாதே இப்போது நானும் கூட வருகிறேன். நாம் இருவருமாகச் சேர்ந்து கொண்டு தருமனை எதிர்த்து அழிப்போம்” - என்று கூறி அவனையும் அழைத்துக்கொண்டு தருமனை எதிர்க்கச் சென்றான் கர்ணன். அப்போது அசுவத்தாமனும் அங்கு வந்து சேர்ந்தான். “என் தந்தை சாவதற்குக் காரணமாக இருந்த அந்தத் தருமனை எதிர்ப்பதற்கு நானும் உங்களுடன் துணைக்கு வருகிறேன்” -என்று அவனும் அவர்களோடு சேர்ந்து கொண்டான். இவர்கள் மூன்று பேரும், இவர்களுடைய படைகளும் போதாதென்று கிருபாச்சாரியனும், சல்லியனும், வேறு தங்கள் படைகளோடு இவர்களுடன் வந்து சேர்ந்து கொண்டனர். ஆகவே, துரியோதனன், கர்ணன், அசுவத் தாமன், கிருபாச்சாரியன், சல்லியன், என்ற ஐந்து பேர்களும் சேர்ந்து கடல் போன்ற படைகளுடனே திரண்டு சென்று தருமனை வளைத்துக் கொண்டு போரிடுவதற்கு முற்பட்டார்கள், தருமனுக்கு ஏற்பட்ட இந்த அபாயத்தை அர்ச்சுனன் முதலியவர்கள் கண்டனர். உடனே அவர்களும் படைகளோடு ஒன்று திரண்டு தருமருக்கு உதவியாக வந்து நின்று கொண்டார்கள். நல்ல சமயத்தில் தருமன் காப்பற்றப்பட்டான்.

தருமனைச் சுலபமாக வென்றுவிடலாம் என்றெண்ணிக் கொண்டு வந்திருந்த துரியோதனன், கர்ணன் முதலியவர்கள் அர்ச்சுனன் உதவிக்கு வந்ததைக் கண்டதும் திடுக்கிட்டனர். இருவருக்கும் போர் ஆரம்பமாயிற்று. நீண்ட நேரம் போர் நடந்த பிறகு துரியோதனனுடைய படைவீரர்கள் மிரண்டு ஓடத் தலைப்பட்டனர். படைகள் ஓடிவிட்டதும் கர்ணன் முதலியவர்களும் புறமுதுகு காட்டி ஓடிவிட்டனர். தருமனின் வெற்றி சத்தியத்தின் வெற்றியாக நின்றது. அந்த நிலையில் பதினாறாவது நாள் போர் நிகழ்ச்சிகள் முடிவதற்குரிய நேரமும் வந்தது. ஆகையால் அன்றைய போர் நிகழ்ச்சிகள் அவ்வளவில் நின்றன. பதினேழாம் நாள் காலை விடிந்த