பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/517

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
515
 

சுற்றியிருந்த அம்புகள் கண்ணன் அருளால் நீங்கியிருந்தன. போர் செய்ய முடிகின்ற நிலையிலும் அர்ச்சுனன் சும்மா இருப்பதைக் கண்டு காரணம் விளங்காமல் திகைத்தான் கண்ணன்.

அப்போது அர்ச்சுனனுடைய கண்களுக்கு மாயையினால் ஒரு பொய்த்தோற்றம் உண்டாயிற்று. எதிரே அம்பு வலைக்கு உட்பட்ட தேரில் நின்று கொண்டிருந்த கர்ணனுடைய உருவம் தருமனுடைய உருவமாக மாறித் தோன்றியது. தருமனே அந்தத் தேரில் நின்று கொண்டு திகைத்துத் திணறி வருந்துவது போல் அவன் கண்களுக்குத் தோன்றவே அவன் தயக்கமடைந்து வில்லைக் கீழே வைத்துவிட்டான். இதைப் பார்த்து ஒன்றும் புரியாமலிருந்த கண்ணன், ‘ஏன் போர் செய்யாமல் சும்மா நிற்கின்றாய்? கர்ணனை ஒழிக்க இது தானே தக்க சமயம்?” என்று அவனை நோக்கி வினாவினான்.

“எதிரே தேரில் என் அண்ணனாகிய தருமன் நின்று வருந்திக் கொண்டிருக்கிறானே? அவனோடு நான் எப்படிப் போர் புரிவது?”

“அடே முட்டாள்! மாயை உன் கண்களை மறைக்கிறது. தேரில் இருப்பவன் தருமனில்லை, கர்ணன்தான். வேண்டுமானால் என்னோடு வா. உன் தமையனாகிய தருமன் வேறோரிடத்தில் இருப்பதைக் காட்டுகிறேன்” என்று கண்ணன் அர்ச்சுனனை அங்கிருந்து அழைத்துச் சென்றான். தருமன் உண்மையாகவே நின்று கொண்டிருந்த இடத்துக்குக் கூட்டிக் கொண்டு போய், “அதோ பார் உன் தமையன் தருமன் “ என்று சுட்டிக் காட்டினான். அப்போது அர்ச்சுனா கர்ணனைக் கொன்றுவிட்டாயா? இல்லையா? அதற்குள் ஏன் திரும்பினாய்?” என்று அவனை நோக்கிக் கேட்டான் தருமன். அர்ச்சுனன் உண்மைத் தருமனுக்கும் மாயத்தருமனுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொண்டான். “இல்லை அண்ணா! நான் இன்னும் கர்ணனைக் கொல்லவில்லை. இனி