பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/532

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

530

அறத்தின் குரல்

புறப்படுங்கள்” - என்று கண்ணன் கூறிய பின்புதான் பாண்டவர்கள் மனம் தேறித் தங்கள் படைகளுடன் போர்களத்திற்குப் புறப்பட்டு வந்தனர். துட்டத்துய்ம்மன் தலைமை தாங்கி வந்தான்.

அங்கே சல்லியன் முன்னேற்பாடாகத் தன் கட்சிப் படைகளைப் பெரிய பெரிய வியூகங்களில் வரிசை வரிசையாக அணிவகுத்து நிறுத்தி வைத்திருந்தான். அதைப் பார்த்த போது பாண்டவர்களும் மற்ற வீரர்களும் திகைத்தனர். அவ்வளவு பெரிய வியூகங்களில் வரிசையாக நிற்கும் கெளரவ சேனையைக் கண்டு தருமன் முதலியவர்களுக்கு மலைப்பாக இருந்தது.

“கண்ணா! இன்று கெளரவ சேனை அணிவகுக்கப் பட்டிருக்கும் விதத்தையும், சல்லியன் அதற்குத் தலைவனாக நிற்கும் தோரணையையும் பார்த்தால் நாம் நிச்சயமாகத் தோற்றுவிடுவோமோ என்று பயமாக அல்லவா இருக்கிறது? என்ன செய்யலாம்?” என்று தருமன் அச்சம் தொனிக்கும் குரலில் கண்ணனைப் பார்த்துக் கேட்டான். அர்ச்சுனன், வீமன் முதலிய மற்றவர்களும் அதே சந்தேக நிழல் படிந்த முகத்தோடு கண்ணனை ஏறிட்டுப் பார்த்தார்கள். தருமன் வாய் திறந்து கேட்ட சந்தேகத்தையே அவர்கள் கண்பார்வையால் தன்னைக் கேட்பதை கண்ணன் புரிந்து கொண்டான்.

“பாண்டவர்களே! கவலைப்படாதீர்கள். நான் சொல்லுகிற முறைகளை அனுசரித்து இன்றைய போர் நடந்தால் வெற்றி உங்களுக்குத்தான். சல்லியனின் வலிமைக்கு இணையில்லை என்பது எனக்குத் தெரியும். ஆனால் நீயும் (தருமனைப் பார்த்து) வீமனும் சேர்ந்து போரிட்டால் சல்லியனைக்கூட வென்றுவிடலாம். அர்ச்சுனன் அசுவத்தாமனை எதிர்த்துப் போரிட வேண்டும். சகாதேவன் சகுனியோடு போர் செய்து அவனைத் தொலைக்க வேண்டும். நகுலன் கர்ணனுடைய புதல்வர்களை எதிர்த்துப்