பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

அறத்தின் குரல்

தங்கியிருந்தான். வீமன் திரும்பி வராததைக் கண்டு அவன் இறந்து போய்விட்டான் என்றே நினைத்து செருக்குற்று மகிழ்ந்தனர் துரியோதனாதியர். பாண்டவர்களும் குந்தி தேவியும் வீமனைக் காணாமல் கலங்கிப் பல இடங்களில் தேடிக் கொண்டிருந்தனர். பாட்டனாராகிய வீட்டுமர் ஒருவர் மட்டுமே “நடந்தது யாது?” என்பதை அனுமானித்து உணர்ந்து கொண்டு பாண்டவர்களுக்கும் குந்திக்கும் ஆறுதல் கூறி “வீமனைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம்! அவன் எப்படியும் நலமாக மீண்டும் திரும்பி வந்து விடுவான்” என்றார். எட்டு நாட்கள் சென்ற பின் வாசுகியின் உதவியால் கங்கைக் கரையை அடைந்து நகருக்குள் நுழைந்தான் வீமன். ஏதோ வேற்றூர் ஒன்றுக்குச் சென்றுவிட்டுத் திரும்பு கிறவனைப் போலக் காணப்பட்டானே தவிர, வேறு சோர்வு ஏதும் அவனிடம் தெரியவில்லை . பாண்டவர்களும் குந்தியும் அன்போடு வரவேற்றனர். ‘வீமன் இறந்து போய் விட்டானோ?’ என்று எண்ணி மனம் துன்புற்றிருந்த நகரமக்களும் அவனைக் கண்டு துன்பம் நீங்கினர். சகோதரர்களாக இருந்தும் துரியோதனாதியர் பாண்டவர்களோடு முரணி, அவர்களுக்கு எதிராகச் சூழ்ச்சிகளே செய்து வந்தனர். பாண்டவர்களில் வீமனின் வலிமை தங்களுக்கு அச்சத்தை விளைவிப்பதாக இருந்ததனால் அவனையே முதலில் அழிக்கக் கருதினர். ஆனால் விதியோ. இந்த வஞ்சகர்களின் கருத்துக்கு நேர் எதிராக இருந்தது.

‘நன்மையும் தீமையும், சத்தியமும் அசத்தியமும், தர்மமும் அதர்மமும் போராடுகின்ற நெருக்கடியான சந்தர்ப்பங்கள் உலக வாழ்வில் அடிக்கடி வருகின்றன. சத்தியம் தோற்று விடுவோ?’ - என்ற பயம் இம்மாதிரி நேரங்களில் காண்போர்க்கு ஏற்படத்தான் ஏற்படுகிறது! ஆனால் நன்மை, சத்தியம், தர்மம் முதலிய இவைகள் யாவும் பொறுத்து ஆற அமரவே வெற்றி பெறுகின்றன. வேகமாகச் செல்லும் தண்ணீர் வேகமாகவே வடிந்து விடுவது போல் தீமையும், அசத்தியமும், அதர்மமும் வேகமாக வளர்வது போலவே