பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

67

 தன்னை அவமானப்படுத்திய யாகசேனன் தன் முன் தலைகுனிந்து உடல் கூசி ஒடுங்கிப்போய் நின்று கொண்டிருந்தான். அவனைச் சிறை செய்துகொண்டு வந்த களிப்போடு வில்லேந்திய கையனாய் அர்ச்சுனன் அருகில் நின்று கொண்டிருந்தான்.

இளமையில் தன்னுடன் கற்ற ஒரு சாலை மாணாக்கனும் பின்பு அரசனாகிய கர்வத்தின் மமதையினால் தன்னை மறந்து அவமானம் செய்தவனுமாகிய யாகசேனன் இப்போது தன் முன் கைதியாக நிற்பதை நோக்கித் துரோணர் மெல்ல நகைத்தார். அமைதியான நீர்ப்பரப்பில் காற்றினால் உண்டாக்கிய சிற்றலைகளைப் போலத் துரோணர் செய்த இந்த நகையை யாகசேனனும் கேட்டான். அவன் செவி வழிய புகுந்த அந்தச் சிறுநகை உள்ளத்தை வாட்டி அனலாகிக் கொதிக்கச் செய்தது. ஆனால் இந்தப் புன்னகையை விட அதிகமான வேதனையைச் செய்த துரோணர் கூறிய சொற்கள். “பாஞ்சால நாட்டுப் பேரரசரே வருக! நீங்கள் என் இளம் பருவத்து நண்பர் யாகசேனனல்லவா? அதனால் தான் இவ்வளவு அன்போடு தங்களை வரவேற்கிறேன். நல்லது, யாக்சேனா! அன்றைக்கு உன் அவையில் நான் உனக்கு நண்பனேயில்லை’ என்று கூறி என்னைப் பொய்யனாக்கி அவமானப்படுத்தினாய், குலத்திலே அந்தணன் நான். வேதத்தின் வழியே வாழ்கிறவன் நான். மன்னன் நீ. அரசின் பெருமைக்கேற்ப உன் பெருமையை வளர்த்துக் கொள்கிறவன் இதோ, உன்னைச் சிறைப் பிடித்துக் கொண்டு வந்து என் முன் கைதியாக நிறுத்தியிருக்கும் இந்த இளைஞனைப்பார்! இவன் என் மாணவன் அர்ச்சுனன்! இந்திரகுமாரன் மிகச் சிறியோனாகிய இவன், பெருமை பொருந்திய உன்னைச் சிறை செய்து விட்டான்! மமதையில் இல்லை வாழ்வின் நேர்மை, அன்பில் இருக்கிறது அது! தெரிந்து கொள். நீ ‘எனக்குத் தருகிறேன்’ என்று கூறியிருந்த பாதியரசாட்சி மட்டுமில்லை; உன் முழு அரசாட்சியுமே இப்போது என் கையில் இருக்கிறது. ஆனால், அது எனக்கு