பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேசிய வெகுஜனத் தகவல் துறை அறிவைப் பரப்பும் ஆற்றல் பெற்றது. மக்களின் ஆக்கபூர்வமான செயல்களே ஊக்குவிக்கக் கூடியது. உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள் கைகளின் சமுதாய முன் முயற்சிகளின் திறனை அதிகப் படுத்துவதற்கு அது பெரிதும் உதவக் கூடியது.

சர்வதேசச் சூழ்நிலை சகஜம் அடைய வேண்டுமானல், சமாதானத்துக்கும் படைக் குறைப்புக்குமான பணி தொடர்ந்து நடைபெற வேண்டும். அத்துடன் மக்களுக்கு எதிரான எல்லாவகைப் பாகுபாடுகளே அகற்றுவதும் நியாய மான அடிப்படையில் சர்வதேசப் பொருளாதார உறவுகளே மாற்றி அமைப்பதும் அவசியம் ஆகும். அதற்காக தகவல் துறையில் ஒரு புதிய சர்வதேச நியதியை உண்டாக்க வேண்டியதும் முக்கியமானது.

தற்போது இருக்கிற சர்வதேசத் தகவல் முறை, கோட் பாட்டு ரீதியாக திருப்திகரமானதாக இல்லை. சர்வதேச உறவுகள் ஜனநாயக ரீதியில் வளர்ச்சி அடைவதற்கு பாதகமாக அது இருக்கிறது.

எல்லா நாடுகள், மக்களது நலன்களுக்காகவும், எல்லாத் துறைகளிலும் சர்வதேசத் தகவல் பரிவர்த்தனையை, உலகளாவிய ரீதியில் நடத்துவதை சாத்தியமாக்கக் கூடிய வெகுஜனத் தகவல் போக்குவரத்து சாதன அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று பெருவாரியான நாடுகன் கோருகின்றன. கூட்டுசேரா நாடுகளும், யுனெஸ்கோ மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஸ்தாபனங்களும் இதற்காக தீவிரமாகப் பாடுபடுகின்றன. இம் முயற்சியில் பலவித சிரமங்களும் எதிர்ப்புகளும் குறுக்கிட்ட போதிலும் இப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக் கிறது; வேகம் பெற்றும் வருகிறது.

எல்லா மக்களின் நலன்களை முன்னிட்டும், உலகுதழுவிய ரீதியில் உருவாகி வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கான வேண்டியது அவசியம்.தகவல் போக்குவரத்துக்கான துணைக் கோள்கள் தோன்றியிருப்பதும், செய்திப் போக்குவரத்தின்

33