பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அது. பிரிட்டிஷ் ஆட்சியாளரிடமிருந்து சுதந்திரம் பெற்ருக வேண்டும் என்று இந்திய மக்கள் உரிமைக் குரல் எழுப்பிஞர்கள். விடுதலைப் போராட்டத்தின் முன்னணியில் மாணவர்களும் செயல்பட்டார்கள். அதை ஒட்டிய கல்லூரிக் கூட்டம் மாலை 6 மணிக்கு ஆரம்பித்தது. இரவு இ.30 மணிக்குக்கூட அதி: முடியவில்லை. உற்சாகமாக நிகழ்ந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று விளக்குகள் அணைந்து போயின. மேடை மீது பேசி நின்ற மாணவர்-அவர் மாணவர் இயக்கத் தலைவர்களில் ஒருவர்ஒலிபெருக்கி இல்லாமலே தனது பேச்சைத் தொடர்ந்தார். மாணவர்கள் அவருடைய பேச்சை அமைதியாகக் கேட்டிருந் தார்கள். அங்கே எந்தவிதமான குழப்பமும் எழவில்லை. மாணவர்கள் அனைவரும்-ஆண்களும் பெண்களும்-அசை உாது அவரவர் இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். கூட்டம் முடிவுற்றதும், ஆண்கள் அவர்கள் இடங்களில் அமைதியாக இருக்க வேண்டும்; மாணவிகள் எழுந்து வெளியே முதலில் செல்ல வேண்டும்; அவர்கள் தங்கள் விடுதிக்குப் போய் சேர்வதற்கு தொண்டர்கள் உதவி புரிவார்கள் என்று மாணவர் தலைவர் கேட்டுக் கொண்டார். அவ்விதமே நிகழ்ந்தது. மாணவிகள் அனைவரும் அவர்கள் விடுதியை அடைந்து விட்டார்கள் என்று தொண்டர்கள் வந்து தெரிவித்த பின்னரே மாணவர்கள் எழுந்து வெளியே போளுர்கள்.

--சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவர் குறிப்பிடும் மற்றுமொரு நிகழ்ச்சி. -

-சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு, ஒரு கலை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. திடீரென்று மின்சக்தி போய்விட்டது. ஏதோ கோளாறு ஏற்பட்டிருந்தது. மீண்டும் அது விரைவில் வரும் என்று தோன்றவில்லை. சபையில் குழப்பம் எழுவதற்கு முன்னதாக, மக்கள் அமைதி பாய் கலந்து போக உதவுவதே நல்லது என்று நிர்வாகிகள் கருதினர். ஒருவர் எழுந்து நிலைமையை விளக்கிச் சொன்ஞர். அமைதியாக வெளியேற வேண்டும்; முதலில்

I {}