பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரசுரகர்த்தர்கள் வெளியிடுவதில் ஆர்வம் காட்டினர்கள். அத்தகைய சர்வதேச இலக்கியங்கள் மிகுதியாக மொழி பெயர்க்கப்பட்டன. .

அந்நாளையப் பத்திரிகைகள் சமூக சீர்திருத்தம் , மக்களின் பண்புகளே செம்மைப்படுத்தல், தனி மனிதப் பண்பாட்டு உயர்வு, நாட்டின் முன்னேற்றம் போன்ற உயரிய கொள்கைகளைக் கொண்டிருந்தன. பணம் பண்ணுவதையே முக்கிய நோக்கமாக அவை கொண்டிருந்ததில்லை.

எழுத்தாளர்களும் தங்களுக்கென தனியாக லட்சிய நோக்கும் எழுத்துலக தர்மங்களும் பெற்றிருந்தார்கள். பணத்தையும் புகழையும் துச்சமெனக் கருதிய படைப் பாளிகள் இலக்கியப் பணி புரிந்து கொண்டிருந்தார்கள்.

கால வேகம் எங்கும் பலப்பல மாறுதல்களைக் கொண்டு சேர்த்தது. வாழ்க்கை மதிப்புகளும் நோக்குகளும் மாறின. பணமேபெரும்பாலாரின்வாழ்க்கை லட்சியமாக ஆகிவிட்டது. பணம் நிறைய நிறைய சம்பாதிக்க வேண்டும், தானும் தனது குடும்பத்தினரும் சுகபோகங்களுடன் வசதியாக வாழ வேண்டும்; அதற்காக என்ன வேண்டுமானலும் செய்யலாம் என்கிற பணநாயக மனுேபாவம் மிகப் பலரைப் பற்றிக் கொண்டது.

இந்நோக்கம் கொண்ட பணத் திமிங்கிலங்கள் சகல துறைகளையும் லாபம் சட்டக்கூடிய வர்த்தகக் களங்களாகவே மதிக்கின்றன. நாட்டுக்கும் மக்களுக்கும் மாண்பும் உயர்வும் அளிக்கக்கூடிய கலை, இலக்கியம், பத்திரிகை, புத்தகப் பிரசுரம் முதலியவற்றைக்கூட லாபகரமாகப் பணம் பண்ணக்கூடிய வணிக சாதனங்களாகவே பணுதிபதிகள் கருதுகிருர்கள். சமூகமும் மக்களும் போற்றத்தகுந்த பண்பு களைப் பேண வேண்டிய மனிதர்களாகப் படுவதில்லை அவர் களுக்கு. தங்கள் உற்பத்திப் பொருள்களை பணம் தந்து அனுபவிக்கக் கூடிய நுகர்வோராகத்தான் தென்படு கிரு.ர்கள்.

12.