பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆகவே நுகர்வோரை வசீகரித்துத் தங்கள் லாப ஆசையை திருப்திகரமாக நிறைவேற்றுவதற்குத் தேவை யான உத்திகள் பலவற்றையும் வியாபார நோக்குடைய ப ணு தி ப தி க ள் தாராளமாகக் கையாள்கிரு.ர்கள். இவ்வகையில் அவர்களுக்கு மேலே நாட்டு வழிமுறைகள்முக்கியமாக முதலாளித்துவ அமெரிக்காவின் செயல் வழிகள்-முன்மாதிரிகளாக அமைகின்றன.

இருபதாம் நூற்ருண்டின் பிற்பகுதியில் நாம் வசிக்கிருேம். நம் காலத்தில், குறிப்பாகச் சொன்னல்,கடந்த இருபது ஆண்டுகளில், மனதைக் குழப்பக் கூடிய விதத்தில் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளும் தொழில் நுட்ப சாதனைகளும் முன்னேறியுள்ளன. பிரசார சாதனங்கள் பெரும் பாய்ச்சலில் வேக வளர்ச்சி பெற்றிருக்கின்றன. உலகின் ஒரு பகுதியில் நிகழ்வன பற்றிய செய்திகள் மறுகோடிப் பகுதியை அடைவதற்கு இப்போதெல்லாம் நாட்கணக்கு ஆவதில்லை; ஏன், பல மணி நேரம் கூட தேவைப்படுவதில்லை. என்ன நடக்கிறது என்பதை அது நிகழ்கின்ற கணத்திலேயே நாம் கேட்டறிய முடியும்; அதை அது நிகழ்கிறபோதே நம் கண்களால் பார்க்கவும் கூடும். அது பல்லாயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பால் நடைபெறுகிறது என்பது தடையாக அமைவதில்லை. சொல்லப்போனல், உலக நாடுகளுக்கு இடையே உள்ள தூரம் மறைந்து அவை பரஸ்பரம் நெருங்கி விட்டன; காலம் அல்லது துாரம் ஏற்படுத்துகிற இடைவெளி இல்லாமல் போய்விட்டது. இயல்பாகவே, நாமும், ஏனைய பிற சமூகங்களைப்போல, மேற்கத்திய கலாசாரத்தின் செல்வாக்கிற்கும் பாதிப்புக்கும் உள்ளாகிருேம். இது இந்தியாவைப் பொறுத்த விஷயம் மட்டும் அல்ல; இதர ஆசிய நாடுகள் அனைத்தையும் பற்றிய உண்மையும் ஆகும்.

விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளும், பிரசார சாதனங்களும் வேகமாக வளர்ந்து பெருகியுள்ள இந்த இருபதாம் நூற்ருண்டின் பிற்பகுதியில், மேலே நாடுகளின் கலாசாரமும் வாழ்க்கை முறைகளும் கீழ்த்திசை நாடுகளின் மீது வலிய தாக்கம் ஏற்படுத்தி வந்திருக்கின்றன; வருகின்றன.

1.3