பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவற்றின் பாதிப்பு இந்தியாவிலும் வெகுவாகவே படர்ந் துள்ளது.

தொழில், விஞ்ஞானம், கலை, கலாசாரம் , இலக்கியம் முதலியவற்றில் வேக வளர்ச்சி பெற்றுவிட்ட மேற்கத்திய தாடுகளின் வாழ்க்கைப் போக்குகள், வளர்ந்து கொண் டிருக்கும் நாடுகளின் மீது பாதிப்பு ஏற்படுத்துவது தவிர்க்க இயலாதது ஆகும்.

இந்த பாதிப்புகள் மக்களின் அறிவையும் பண்புகளையும் உயர்த்தக்கூடிய விதத்தில் இருந்தால், நாட்டின் கலாசாரத்தை செழுமைப்படுத்தும் தரத்தில் அமைந்திருந் தால், மகிழ்ச்சி அடையலாம். கலாசாரப் பரிவர்த்தனைகள் சம்பந்தப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும்; அவர்களுடைய கலாசாரத்தை சிதையாமல் காக்கவும் வேண்டும்; உண்மையில், இன்றைய நிலைமை அப்படி இல்லை. மக்களுக்கு உரிய கலாசாரம் சிதைத்துச் சீர்குலைக்கப்படுகிறது. மக்களை கலாசார அளவில் முடமாக்கும் செயலே தீவிரமாக நடைபெற்று வருகிறது. கயநலத்தோடும் சுயலாப நோக் குடனும் செயல் புரிகிற முதலாளி வர்க்கம் மனித சமூகத்தின் மீது பொருளாதார ஆதிக்கம் செலுத்தி சுரண்டிக் கொழுக்கிற போதே, அச்செயலுக்கு பக்கபலமாக இருக்கும் பொருட்டு, மக்களின் சிந்தனைத் திறனை மழுங்கடித்து மக்களை உண்மையான பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பி விடும் முறையில் திட்டமிட்டே நச்சுக் கலாசாரத்தை திறமையோடு பரப்பி வருகிறது.

முதலாளி வர்க்கம் மக்களின் சிந்தனைப் போக்கை மாற்றி அமைக்க முயல்கிறது. நடைபெறுகிற சுரண்டலுக்கு எதிர்ப்பாக மக்கள் கேள்வி எழுப்ப முடியாத விதத்தில் அவர்களின் மனப்பண்டை மாற்றுவதில் அது கவனமாக இருக்கிறது. மக்களுக்கு ஒரு போதை ஊட்டப்பட வேண்டும்: அவர்களுக்கு எதிரிடும் பிரச்சினைகளிலிருந்து அவர்கள் கவனத்தைத் திருப்பி, இன்றைய நிலைமையே திருப்திகர மானது, இதுவே நீடிக்க வேண்டும் என்று அவர்கள் ஆசைப் படும்படி தூண்டக் கூடிய போதை மருந்து மக்களுக்கு

I 4