பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடர்ந்து புகட்டப்பட வேண்டும். எனவேதான் புதிய கலாசாரம் என்ற போர்வையில், மயக்கம் தருகிற, பொய்யான, உணர்வுகளை கிளுகிளுக்க வைக்கிற விஷயங்கள் துணிகரமாகவும் திட்டமிடப்பட்டும் மக்கள் மத்தியில் பரப்பப்படுகின்றன.

இத்தகைய முயற்சிகளின் நோக்கங்கள் என்ன என்பதைப் பார்ப்போம். போதை’க்கு உட்பட்ட, அல்லது மயக்கநிலை அடைந்துவிட்ட, ஒருவன் அநீதியை எதிர்த்துப் போராடக் கூடிய தனது சக்தியை இழந்து விடுகிருன், அவனுடைய போராட்ட குணம் வலுவற்றுப் போகிறது; அல்லது ஒரே அடியாக மரத்துப் போகிறது. மனித சமுதாயத்தை உயர்த்தக் கூடிய ஒரே சக்தி உழைப்புதான் என்பதில் அவனுக்கு நம்பிக்கை இல்லாமல் போகிறது. தானும் தன்னைச் சேர்ந்தவர்களும் {f; }"డr வருங்காலத்தை அடை வதற்காகப் போராட வேண்டும் என்ற உணர்வு ஒவ்வொரு வருள்ளும் உறைந்து கிடக்கிறது; இப்போது அவனது அந்த உணர்வு மழுங்கிப் போகிறது. அவன் விரக்தி அடைகிருன்; அவனது நம்பிக்கைகள் வறண்டு விடுகின்றன. அவன் குழப்பவாதியாகி, செயலற்றவளுகிருன். விரைவில் பணக்காரளுவதற்கான குறுக்கு வழிகளை அவன் தேட முயல்கிருன். போலியான ஒரு திருப்தி அவனை ஆட்கொள் கிறது. இப்படி சமூகத்தில் மறைமுகமாகவும் மெது மெதுவாகவும் நிலைபெற்று வருகிற மாறுதல்களின் விளைவாக மனிதர்கள் இயந்திரத் தன்மை பெற்று, சுரண்டும் வர்க்கம் கலாசார சாதனைகள் என்ற பெயரில் என்ன கொடுத்தாலும் அதை ஆவலோடு அங்கீகரிக்கும் நிலைக்கு வந்துவிடுகிரு.ர்கள்.

மனிதர்கள் தீமையை அகற்றுவதற்காக எதிர்ப்பு உணர்வு கொள்வது, விழித்தெழுந்து போராட முனைவது, தங்கள் வாழ்க்கை நிலையை வளம் செய்வதற்காக உழைப்பில் முழு நம்பிக்கையோடு ஈடுபடுவது, வருங்கால வாழ்வின் உயர்விலும் உன்னதத்திலும் உறுதி பூண்டு தன்னம்பிக்கை முனைப்புடன் செயலாற்றுவது போன்ற மனநிலைகளையும் முயற்சிகளையும் சிதறடிப்பதிலும், மனிதர்கள் மத்தியில்

15