பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவை மழுங்க வைப்பதற்கும் அவர்களை செயலற்றவர் களாக ஆக்குவதற்கும், அவர்களது அரசியல் விழிப்பை மட்டுப்படுத்துவதற்கும் பயன்படுத்துகின்றன. இரண்டாவ தாக, மமேலேயாக லாபம் ஈட்டித் தமது பணப்பெட்டி களே நிரப்பிக்கொள்ளப் பயன்படுத்துகின்றன.

'முதலாளித்துவம் கலையையும், இலக்கியத்தையும், இசையையும் மார்க்கெட்டில் விலைபோகும் ஒரு வர்த்தகப் பொருளாக மாற்றிவிட்டது. கலையின் உயரிய முக்கியத் துவத்தையும் சிறப்பையும் இழிவுபடுத்தியுள்ளது. இதல்ை தான் மேலேய முதலாளித்துவ நாடுகளில் வெகுஜனக் கலாசாரம்’ என்பது உண்மையில் வெகுஜனங்களுக்கான கலாசாரமாக இல்லாது, அவர்களுக்கு எதிரான கலாசார மாக இருப்பதைக் காண்கிருேம். இது போலி கலாசாரம்; ஜனநாயக விரோத கலாசாரம், மக்களை மாக்களாக்கும் கலாசாரம், ’

இவ்விதம் பி. வி. கக்கிலாயா குற்றவாளிக் கூண்டில் முதலாளித்துவம் என்ற நூலில் உலக நிலையை உள்ளது. உள்ளவாறு எடுத்துக் கூறியிருக்கிருர்,

மேலை நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வருகிற திரைப் படங்கள்-முக்கியமாக அமெரிக்கா தயாரித்து அனுப்புகிற படங்கள்-செக்ஸ், வன்முறை, பயங்கரம் ஆகியவற்றையே பெரிதுபடுத்திக் காட்டுகின்றன. இந்திப் படாதிபதிகள் அவற்தைக் காப்பியடிக்கிருர்கள். தமிழ்ப்படத் தயாரிப் பாளர்கள் இந்திப் படங்களையும் அமெரிக்கப் படங்களையும் காப்பியடிப்பதோடு, வேறு சில மசாலாக்களையும் சேர்த்து கலைக்கொலே பண்ணுகிருர்கள்.

தமிழ்ப் படாதிபதிகளின் போக்கை நையாண்டி செய்கிற விதத்தில் ஒர் எழுத்தாளர் ஒரு கதாபாத்திரத்தை இப்படிப் பேசவைத்திருக்கிருர்: .

"சினிமாவுல சம்பாதிக்கிற மாதிரி வேற எதுவ சம்பாதிக்க முடியும்? ஒரு ரேப் சீன். சின்னஞ் சிறிசுகளை திருப்திப்படுத்திடலாம். அதுக்காக ஒரு அழுகை, பெண் 罩&