பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களுக்கு திருப்தி. ஒரு மழை சீன். கிழங்களுக்கு கொண் டாட்டம். ஒரு கும்மாங்குத்து. சண்டியர்களே வரவழிைச் சுடலாம். வ லி பர் க. ளை திருப்திப் படுத்தலாம். ஒரு சில்க் சுமிதா, இல்லன்ன ஒரு அனுராதா எல்லாருக்கும் திருப்தி. இதுக்குள்ளே கதைபண்ணி லட்சம் லட்சமாய் சம்பாதிக்கிற தொழில் வேற எது இருக்கு? மேலும் என் வசனத்துலே படம் கண்டிப்பாய் ஒடும், ஏன்ன இரு பொருள்ல அவ்வளவு ஆபாசமாய் வசனம் எழுதியிருக்கேன். மூளையோ மூலதனமோ அதிகம் இல்லாமல் லட்சம் லட்சமாய் சம்பாதிக்கிறதுக்கு வேற என்ன தொழில் இருக்கு? (சு. சமுத்திரம்- அவளுக்காக நாவலில்)

முதலாளித்துவம் எதையும் தனக்கு லாபம் தேடித் தரக்கூடிய சந்தைச் சரக்காகவே மதிக்கிறது. இது அதனுடைய இயல்பு. எனவே, திரைப்படத்தையும் அது வெற்றிகரமான வணிகப் பொருளாகவே உருவாக்குகிறது. இந்தியப் படத் தயாரிப்பாளர்கள் மட்டும் இதற்கு விதி விலக்காகி விடுவார்களா என்ன?

பிலிம் பெடரேஷன் ஆஃப் இந்தியாவின் தலைவர் கூற்று இதை வெகு தெளிவாகப் புலப்படுத்துகிறது. அவர் கூறுகிருர்:

  • இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்படும் வெளி நாட்டுப் படங்கள் அவற்றின் அதிகப்படியான பாலுணர்ச்சி, வன்முறை, பயங்கரம் ஆகியவற்றின் காரணமாக அதிர்ஷ் டத்தை அறுவடை செய்கின்றன. இவைதான் இந்தியப். படங்களுக்குப் போட்டியாக அமைகின்றன. எனவே இந்தியப் படங்களும் வெளிநாட்டுப் படங்களைப்போல் அமையவேண்டிய அவசியம் நேர்கிறது. அடிப்படையில் பார்க்கப்போளுல் சினிமா ஒரு வியாபாரம்தானே தவிர, அது ஒரு உபதேசமண்டபம் அல்ல.சினிமா வெறும் பொழுது போக்கை மட்டும்தான் குறிக்கோளாகக் கொண்டது, அது ஒருபோதும் நீதிபோதனை செய்யும் அவசியம் கொண்டதில்லை என்பதை மறந்துவிடக் கூடாது. அப்படி அவை உபதேசம் செய்யத் தொடங்கிளுல் திரை அரங்குகள்

19