பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாங்கள் வெற்றிகரமாகப் பணம் பண்ண வேண்டும் என்பதற்காக, தங்கள் மனசின் இருள்தனங்களையும் வக்கிரங்களையும் குரூரங்களையும், ஜனங்கள் விரும்பு கிருர்கள் என்று சாக்குச் சொல்லி, சமுதாயத்தின் மீது திணித்துக் கொண்டிருக்கிருர்கள் பனநாயகர்கள். சினிமா, இதர கலைகள், பத்திரிகைகள், புத்தகங்கள் முதலிய சகல துறைகளிலும்.

விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளும் ஆராய்ச்சி அறிவும் பணுதிபதிகளின் இந்த விபரீதப் போக்கிற்குப் பெரும் அளவில் துணை புரிகின்றன. வன்முறையிலும் செக்ஸ் ஈடுபாடுகளிலும் புதுமையான காட்சிகளைப் புகுத்துவதற்கு அமெரிக்கரின் திறமை வக்கிரமாகச் செயலாற்றுகிறது. மர்மம் மற்றும் திகில் மிகுந்த திரைப் படங்களை தயாரித்து படம் பார்ப்போரைக் கவர்ந்திழுப்பதற்கு விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை அவர்கள் தீவிரமாகக் கையாள்கிருர்கள். ஜாஸ்' என்ற திகில் படத்தில் 8 மீட்டர் நீளமும் அரை டன் எடையும் கொண்ட வெண்ணிறச் சுரு:மீன் ஒன்றை உருவாக்கி, அதை 15 ஆப்பரேட்டர்கள் ரிமோட் கன்ட் ரோல் முறையில் இயக்கினர்கள். இந்தச் சுரு:மீன் மனிதரை வேட்டையாடிக் கொல்கிறது. சுருவினல் துரத்தப்பட்டு, அதன் வாயில் சிக்குகிற பெண்ணை, அவளது அவஸ்தைகளைக் காட்டுகிற வகையில் பெண் உடலின் பல பகுதிகளையும் செக்ஸ் கவர்ச்சியோடு படம் பிடித்துக் காட்டுகிற வாய்ப்பு இதில் திறமையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அந்தப் பெண், தனக்கு வர இருக்கிற ஆபத்து பற்றிய முன்உணர்வு எதுவுமின்றி,கடவில் உல்லாசமாக நீந்துகிருள். கடல் நீரின் கதகதப்பு அவளுக்கு ஆனந்தம் அளிக்கிறது. பிறகு திடீரென்று ரத்தத்தை உறைய வைக்கும் அலறல் எழுகிறது. அவளைச் சுற்றிலும் உள்ள தண்ணீர் உலைப்பானே யில் நீர் கொதிப்பது போல் குமிழியிட்டுக் கொந்தளிக்கிறது. அவள் அந்த இடத்தை விட்டு விலகிச் செல்ல அரும்பாடு படுகிருள். ஆனல் மிகுந்த சக்தி வாய்ந்த, பயங்கரமான எதுவோ ஒன்று அவளை தண்ணிருக்குள் அடிமட்டத்துக்கே

23