பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சினிமா மற்றும் டி.வி. காட்சிகளே தங்களது தீய செயலுக்குத் துரண்டுதலாக இருந்தன என்று குற்றவாளிகள் சிலர் வாக்குமூலம் கொடுத்துள்ளதும் அவ்வப்போது பத்திரிகைச் செய்திகளாக வந்திருக்கின்றன.

நற்பண்புகளைச் சீர்குலைத்து, வாழ்க்கையின் அமைதி யையும் ஆனந்தத்தையும் கெடுத்து வருகிற இந்த மேலை நாகரிகத்தின் சக்தி வாய்ந்த நிழல் நம் நாட்டு மக்களின் மனசையும் கறைப்படுத்திக் கொண்டிருக்கிறது-திரைப் படம், டி.வி., வீடியோ ஆகியவற்றின் மூலம். இவற்றின் தீய பாதிப்புகளின் விளைவுகளே நாட்டில் பெருகி வருகிற கொலே, கொள்ளே, செக்ஸ் குற்றங்கள் மற்றும் வன்முறைச் செயல்கள் பலவும் ஆகும்.

ஒரு சினிமாவைப் பார்த்துவிட்டு,அதன் உந்துதலாலேயே தொடர் கொலேகளைச் செய்தேன் என்று ஒரு குடும்பத்தின் பதினுேரு பேர்களைக் கொன்று குவித்தவன் தெரிவித்தது நம் நாட்டின் பத்திரிகைகள் பலவற்றிலும் வெளி வந்தது. இது ஒர் உதாரணமாகும். -

இப்படி வெளிப்படையாக ஒப்புக்கொள்ளப்படாத தீய பாதிப்புகள் எத்தனையோ இருக்கலாம்.