பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. பத்திரிகைகளும் புத்தகங்களு

பத்திரிகைகளும் புத்தகங்களும் லாபம் சம்பாதித்துத் தரக்கூடிய வர்த்தகச் சரக்குகள் ஆக முடியும் என்று திட்ட வட்டமாக உணர்ந்து கொண்ட வணிக நோக்குடைய பனநாயகர்கள் 1950களில் இத்துறையில் புகுத்தார்கள். நாளிதழ், வாரப் பத்திரிகை ஆகியவற்றை ஜனரஞ்சகமாக வெற்றிகரமான முறையில் நடத்துவதற்கு அமெரிக்கத்தனம் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையோடு துணிந்து செயலில் ஈடுபட்டார்கள் அவர்கள்.

1950களுக்கு முன்பு-இந்தியா அரசியல் சுதந்திரம் பெறுவதற்கு முன்னர்-தமிழில் பத்திரிகைகள் லாபகரமான தொழிலாக இருந்ததில்லை. பத்திரிகை மற்றும் புத்தகப் பிரசுரத்தில் ஈடுபட்டிருந்தவர்களும் அவற்றை ஒரு வியாபார மாகக் கருதியதுமில்லை.

விடுதலை உணர்வு, தேசபக்தி, சமூக சீர்திருத்த நோக்கு, தனிமனிதப் பண்பாட்டு உயர்வு, ஒழுக்கம் முதலிய வற்றை பத்திரிகைகள் வாயிலாகவும் நல்ல புத்தகங்கள் மூலமாகவும் மக்களுக்கு ஊட்டவேண்டும் என்ற லட்சியப் போக்கு உடையவர்களே பெரும்பாலும் பத்திரிகை நடத்து கிறவர்களாகவும் அவற்றில் எழுதுகிறவர்களாகவும்இருந்தார் கள். மக்களிடையே அறிவு விழிப்பும் சிந்தனை ஒளியும் பரப்ப வேண்டும், மொழியில் மறுமலர்ச்சியும் வளமும் சேர்க்க வேண்டும் என்பதும் அவர்களுடைய நோக்கமாக இருந்தது.

எனவே, சிந்தனை கனம் கொண்ட-வாசகர்களை சிறிது சிரமப்படுத்தக் கூடிய-விஷயங்களைக் கொடுப்பதற்கு

27