பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்திரிகையாளர்கள் அந்தக் காலத்தில் தயங்கியதில்லை. பத்திரிகையின் தரத்தை அவர்கள் உயர்வாகக் கருதினர்கள். அதற்காக தங்களுக்குத் தாங்களே வகுத்துக் கொண்ட பத்திரிகை தர்மங்களே அனுஷ்டித்தார்கள். அதளுல் ஏற்பட்ட கஷ்டநஷ்டங்களை மகிழ்ச்சியோடு சகித்துக் கொண்டார்கள். நாட்டு மக்களின் மனநலம், உயர் பண்பாடு, அறிவு வளர்ச்சி, நன்னெறிகள் முதலியனவே

அவர்களுக்கு முக்கியமானவையாகப்பட்டன.

இந்தியா விடுதலை பெற்ற பிறகு,நாடு நெடுகிலும் தொழில் மலர்ச்சியும் வாணிப வளர்ச்சியும் பல்கிப் பெருகியபோது, பணமே எங்கும் ஒளி நாட்டியம் ஆடத் தொடங்கியது. பணம் பண்ணுவதே பலரின் நோக்கமாயிற்று. பத்திரிகைத் துறையும் வணிகர்கள் ஆதிக்கத்துக்கு உள்ளாயிற்று.

இவர்கள் தங்களுடைய விற்பனைச் சரக்குகளை வாங்கி உபயோகித்து தங்களுக்கு லாபம் ஈட்டித் தரக்கூடிய "கன்ஸ்யூமர்களாகத்தான் மக்களை மதித்தார்கள். அதற்காக வாசகர்களின் எண்ணிக்கையை லட்சக்கணக்கில் அதிகரிக்க வைப்பதே இவர்களுடைய அடிப்படை லட்சியம் ஆயிற்று. அதற்குத் தகுந்த வழிவகைகளை இவர்கள் திறமை யாகவும் சாதுரியமாகவும் கையாளலாஞர்கள்.

பொதுவாக, சாதாரணமானவர்கள் d荔森”憩Df了蓝芯了 விஷயங்களைப் படிப்பதில் அக்கறை கொள்வதில்லை. மூளையை சிரமப்படுத்துகிற, சிந்தனைக்கு வேலை வைக்கிற, விஷயங்கள் சராசரி வாசகர்களுக்குப் பிடிப்பதில்லை. இவர்களே மிகப் பலராக உள்ளனர். லைட்டான சமாசாரங்களே பெரும் பான்மை வாசகர்களைக் கவர்ந்திழுக்கும். பத்திரிகை பார்ப்பதும் புத்தகம் படிப்பதும் ஹெவி மீல்ஸ் போல் இருக்கலாகாது: அவ்வப்போது கொறிக்க உதவுகிற நொறுக்குத் தீனி போல, உற்சாகத்துக்காக உபயோகிக்கிற காப்பி டீ வெற்றிலை சமாசாரம் போல அமைய வேண்டும். பத்திரிகை படிப்பவர்களே சிரமப்படுத்தக் கூடாது. மாருக, வாசகர்களுக்கு கிளுகிளுப்பு ஊட்ட வேண்டும். அப்படியே லேசாகப் பார்வை ஒட்டி, பக்கங்களைப் புரட்டி,

3 &