பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேலோட்டமாக மேய்ந்துவிட்டு ஒதுக்கி விடக்கூடிய தன்மையில் தயாரிக்கப்பட வேண்டும். இப்படி அமெரிக்கப் பத்திரிகைக்காரர்கள் கையாண்டு வெற்றி கண்ட உத்திகள் பலவற்றையும் நம் நாட்டின் பத்திரிகை வணிகர்களும் கையாளலாஞர்கள்.

இருக்கவே இருக்கின்றனவே, செக்ஸ் விஷயங்கள், வன்முறைச் செயல்கள் சம்பந்தமான விவரிப்புகள், மர்ம விவகாரங்கள், மற்றும் சில மசாலாக்கள். எல்லாவற்றுக்கும் இளமை, இனிமை, புதுமை என்ற மேல்பூச்சு மினுமினுப்பு.

பெண்களின் கவர்ச்சி அம்சங்களே செக்ஸியாக வெளிச்சமிட்டுக் காட்டும் படங்கள். பின்-அப் என்ற மயக்கும் மோகனவல்லிகள், செக்வியான பெண்களின்

போஸ்டர் படங்கள், நடுப்பக்கத்தில் முக்கால் நிர்வான அழகிகளின் கவர்ச்சிப் படங்கள், அவற்றுக்கேற்ற கதைகள், காதல் கதைகள் என்ற பெயரில் காமக் கேளிக்கைகளை விரிவாக வர்ணிக்கும் சொற் சித்திரங்கள். கொலை விவரிப்புகள், அவற்றைச் சார்ந்த மர்மங்கள், துப்பறிதல்கள் அப்புறம் என்ன, மேலும் என்ன என்ன, முடிவுதான் என்ன என்று வாசகரின் ஆவலைத் தூண்டிவிடும் சஸ்பென்ஸ்கள்இந்த ரகக் கதைகளே சிறுகதைகள், குறு நாவல்கள், நாவல்கள் என்று உற்பத்தி செய்யப்படுகின்றன.

இவற்றில் பெரும்பாலானவை மேலே நாட்டுப் படைப்புகளை காப்பி அடித்து எழுதப்பட்ட தயாரிப்புகள் தான். அமெரிக்க, ஐரோப்பிய நாவலாசிரியர்கள் சிலர் கையாண்டு வெற்றி கண்டுள்ள படைப்பு உத்திகள் இங்கே உள்ளவர்களாலும் அனுஷ்டிக்கப்படுகின்றன. பெண் அங்கங்களின் சுவையான வர்ணிப்புகள், செக்ஸ் பிளே"யை ரசம் நிறைந்த சொற்களில் சித்திரிப்பது-இவற்றை கதைக்குத் தேவை இல்லாத போதும் ஒரு சில பக்கங்களுக்கு ஒரு முறை, அல்லது ஒர் அத்தியாயம் விட்டு ஒர் அத்தியாயம் என்ற விகிதத்தில்-தாராளமாகக் கலந்து விடுவது; ஆண்பெண் உறவு வக்கிர லீலைகளை விவரிப்பது-இத்தகைய

29