பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உத்திகள் மேலைநாட்டுக் கலாசாரத்தின் தாக்கங்களாக நீதியாவின் பல்வேறு மொழிகளிலும் இடம் பெற்றுள்ளன ,

இன்னும் வளர்ந்து வருகின்றன.

உள இயல் ஆய்வு என்ற ரீதியில் ஆழமும் கனமும் பெற்ற இலக்கியத் தன்மையோடு அல்ல. கிளுகிளுப்பு தரக்கூடிய இனிமைகள் என்ற முறையிலே தான் இவை எல்லாம் கலந்து வைக்கப்படுகின்றன, மேலோட்டமான படப்பிடிப்பு

露露譯露。

இயல்பான காம விளையாட்டு விவரிப்பு அலுத்துப் போகலாம் என்று தோன்றுகிறபோது, சொல் வணிகர்கள் எல்லே மீறிய (முறை தவறிய) அல்லது இயல்புக்கு மாமுன செக்ஸ் விளையாட்டுகளே இன்ட்டரஸ்டிங்காக விவரிப்பதில் உற்சாகம் காண்கிரு.ர்கள். எல்லாம் வாசகர்களைக் கவர்ந்து இழுத்துப் பிடித்து வைத்திருப்பதற்காகத்தான்.

தமது வெளியீட்டாளர்கள் கற்றுக் கொண்டிருக்கிற வியாபார உத்திதான் இதெல்லாம். அவர்கள் உற்பத்தி பண்ணுகிற சரக்குகள் மூலம் அவர்கள் கணிசமான லாபம் பெற வேண்டும் அல்லவா? எல்லாம் பிசினஸ்தான். முதலாளித்துவத்தில் பிசினஸ் என்ருல் அதில் எதுவும் தியாயமே; லாபத்துக்காக எதையும் செய்யலாம் என்பதே நியதி ஆகும்.

உள்ளதைச் சொல்வதானுல், ஒரு பத்திரிகை அல்லது புத்தகம் பிரசுரிப்பவர் தனக்கென உயர் கொள்கை எதையும் கொண்டிருக்கவில்லை. சமூகம் முன்னேறுவதற்காக தன்னல் இயன்றதை செய்ய வேண்டிய பொறுப்பு தனக்கு உண்டு என்றும் அவர் கருதுவதில்லை. எந்த ஒரு வியாபார அமைப்பு போலவே, பத்திரிகை அல்லது புத்தகம் வெளியிடுவதும் ஒரு வணிக முயற்சிதான் என்றே அவர் எண்ணுகிரு.ர். பிசினஸ் என்ருல் அது லாபம் பெற்றுத்தர வேண்டும்; லாபம் அடைவதற்கு சிலவழிமுறைகளை கையாளத்தான் வேண்டும். ஆகவே அவர்கள் அப்படிச் செய்கிருச்கள்.

జి{}