பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. வணிகப் பொருளாகும் வனிதையர்

பத்திரிகை நடத்திப் பணம் திரட்ட விரும்பிய பணக் கார இளைஞர் ஒருவர் மேலே நாட்டு ட்ரூ ரொமான்ஸ்’ பாணி இதழ் ஒன்றை ஆரம்பித்தார். காதலில் வஞ்சிக்கப் பட்ட பெண்கள் வாழ்க்கையில் வழுக்கி விழுந்த வனிதையர், சிவப்பு விளக்கு வட்டாரத்துப் பெண்கள் தொடர்பான கதைகளை வெளியிட்டார். அவற்றுக்கு ஆண்-பெண் மாடல் களே உபயோகித்து வசீகரப் போஸ்களில் போட்டோக்கள் தயாரித்து பக்கத்துக்குப் பக்கம் அழகுபடுத்தினர். இளமை இனிமை, புதுமைக்குப் பஞ்சமில்லே அந்தப் பத்திரிகையில்,

பத்திரிகையின் விற்பனை வெற்றியாக அமைந்ததோ இல்லையோ, பரபரப்பூட்டும் தனிரக வெளியீடாக அது விளங்கியது என்னவோ உண்மைதான். அதன் அலுவலகம் எப்போதும் உயிர்த்துடிப்புடன் விளங்கியது. பத்திரிகை ஆசிரியருக்கு உதவும் நோக்குடன் பணக்கார இளைஞர்கள் அடிக்கடி வந்து போளுர்கள். நாகரிக வேக வாகனங்கள் அந்த அலுவலகத்தின் முன் சதா முகாமிட்டிருந்தன. குறிப் பிட்ட சில நேரங்களில் அவற்றின் எண்ணிக்கை வெகு அதிக மாக இருந்தது.

பணக்கார வாலிபர்களுக்கும். பணத்தை துச்சமென மதித்து தாராளமாகச் செலவு செய்யத் தயாராக இருந்த ஜாலி பிரதர்களுக்கும் ஒரு பொழுதுபோக்கு நிலையமாக அந்த இடம் மாறியிருந்தது. நவ யுவர்களும் ஒருசில நவயுவதி களும், பணத்துக்காக உடல் வெளிச்சமிட முன் வந்த

总4