பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாடல் பெண்களும் அங்கே அந்நேரங்களில் ஆஜராகி யிருப்பது வழக்கம்.

மெதுமெதுவாக உண்மை வெளியே கசிந்து ஊர்ந்தது. அந்தப் பெரிய கட்டிடத்தின் அந்தரங்கமான ஒரு பகுதியில் நிர்வாணம் நாள்தோறும் கொலுவேற்றப்பட்டது. உடம்புக் கும் உள்ளத்துக்கும் நலம் விளைவிக்கும் விஞ்ஞானமாக * நிர்வாணக் கலை வளர்க்கப்படுகிறதாமே மேலே நாடுகளில், அந்த வகையான நிர்வாணக் காலனி முறை இந்த நாகரிகப் பெருநகரத்திலும் சோதனை ரீதியாக நடத்தப்படுகிறது. என்று பேச்சுப் பரவியது. அப்புறம், கல-விஞ்ஞானம் என்ற திரைக்குப் பின்னே விபசாரம் அங்கே உல்லாச நாட்டியம் புரிந்து வந்தது என்ற உண்மையும் அம்பலமா யிற்று, ஒரு சில தினங்களிலேயே......

மாநகரத்தின் மிக நாகரிகமான ஒரு வட்டாரத்தில் மாளிகை போன்ற ஒரு பெரிய வீடு, அதில் வசித்து வந்த டாக்டரின் தொழில் திடீர் விழிப்பு பெற்றது போல் ஜாம் ஜாம் என நடக்கலாயிற்று. சொகுசுக் கார்களும் ஜோரான வாடிக்கைக்காரர்களும் அந்த க்ளினிக்கை மொய்க்கலா யினர்.

டாக்டரின் வீட்டில் பணம் கொழிக்கத் தொடங்கியது. இதன் அடிப்படையை ஆராய முனைந்தவர்களுக்கு அதிர்ச்சி தரும் உண்மைகள் வெளிச்சமாயின. வீடியோ மூலம் புளுபிலிம்கள் காட்டப்பட்டு வந்தன அங்கே, ஜாலி தேடும் உல்லாச ஜோடிகளின் ஜல்சாவுக்கும் இடவசதி செய்து தரப்பட்டது. நூறு நூருகவும் ஆயிரக்கணக்கிலும் பணத்தை வாரி வழங்கத் தயாராக இருந்தவர்களுக்கு அங்கே புதுமையான இனிமைகள் கிடைத்துக் கொண்டி ருந்தன ...

வெளிப்பார்வைக்கு சாதாரணமாகத் தோன்றிய ஒரு கட்டிடம். முகப்பு அறையில் சாதாரணமான மேஜை நாற்காலிகள், பொழுது போக்கிற்குத் துணை புரியும் பத்திரிகைகள், சீட்டுக்கட்டுகள், கேரம் போன்ற விளையாட்டு

器器