பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதனங்கள் முதலியன காணப்பட்டன. உள்அறையில் மதுவகைகள் காத்திருந்தன.

உல்லாச புருடர்களின் பொழுதுபோக்கிற்காக ஏற்பட்ட 'மணமகிழ் மன்றம் என்று அதன் புறத்தோற்றம் காட்டியது. ஆளுல், உள்ளே இளம் பெண்களே வைத்து விபசாரம் வியாபாரமாக வளர்க்கப்பட்டு வந்தது என்கிற உண்மை நாளடைவில் வெளிப்பட்டது......

திடீர் திடீரென்று தலைதுாக்கிய மசாஜ் பார்லர்’களில் அதுவும் ஒன்று. தேவைப்பட்டவர்களுக்கு நாகரிகப் பெண்கள் உடம்பைப் பிடித்து விட்டு அசதியைப் போக்கி அழகை அதிகரிக்க உதவுகிற நாகரிகக் கலை நிலையம்.

பிசினஸ் தன்ருகத்தான் நடந்தது. ஒரு நாள் பட்டப்பகலில் உல்லாச இளைஞன் ஒருவன் அந்த திலேயத்தில் பணி புரிந்து கொண்டிருந்த நவயுவதி ஒருத்தியை சுட்டுக் கொன்று விட்டான்.

காதல் போட்டி, பொருமையின் விளைவு என்றெல்லாம் பேச்சுகள் பிறந்தன. உண்மையைத் தேடும் முயற்சி பல இரகசியங்களை வெட்ட வெளிச்சமாக்கியது.

மசாஜ் பார்லர் என்ற விளம்பர வெளிச்சத்தால் அனைவர் கண்களேயும் கூசவைத்து, ஆந்தரங்கத்தில் பெண்களை வியாபாரப் பொருளாக்கி விபசாரம் என்கிற இருட்டுத் தொழில் லாபகரமாக நடத்தப்பட்டது அங்கே.....

இந்த விதமான வேலைகள் எல்லாம் மேலைநாட்டுக் கலாசாரத்தின் பாதிப்புகளேயாகும்.

இந்த நிலையை ஒரு அறிவுஜீவி அழகாகக் குறிப்பிட் டிருக்கிருர் இப்படி: மிகவும் பெருமை பாராட்டப்படுகிற நமது எலெக்ட்ரானிக் சொர்க்கத்தில், பெண்கள் நுகர் வோருக்குரிய பொருள்களாக நோக்கப்படுகிற தன்மையில் இருக்கிருர்கள். அதன் மூலம் நுகர்வோரின் உளஇயலுக்கு அவர்கள் பலியாகிருள்கள்.”

36