பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியப் பத்திரிகைகள் பலவற்றிலும்-தமிழ் வார இதழ்களிலும்தான்-இத்தகைய விஷயங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

விபசாரத்தை தொழிலாகக் கொண்டிருக்கிற பெண்களை சந்தித்து, அவர்கள் வரலாற்றைக் கேட்டறிந்து, உண்மைக் கதைகள் என்றும், சிவப்பு விளக்குக் கதைகள் என்றும் பத்திரிகைகள் பிரகரம் செய்கின்றன.

கீர்த்தி பெற்ற விபசாரிகள், குற்றவாளிகள் சிலரை சுயவரலாறு எழுதும்படி தூண்டி, கவர்ச்சியான முறை களில் விளம்பரங்கள் செய்து, அவற்றை பத்திரிகைகளில் தொடர் கட்டுரைகளாகவும் புத்தகங்களாகவும் பிரசுரித்து, பரபரப்பான விற்பனைக்கு வழி பண்ணுகிருர்கள், மேலை நாட்டு பிரசுரகர்கள்,

சமூகப் பிரச்சினேகளே ஆய்வு செய்து, அவற்றின் அடிப் படைக் காரணங்களேக் கண்டு சிந்தித்து, கோளாறுகளையும் குறைபாடுகளேயும் அகற்றுவதற்கான செயல் திட்டங்களில் முனயும்படி மக்களைத் தூண்ட வேண்டும் என்ற எண்னத்துடன் இப்படிப்பட்ட விஷயங்கள் பிரசுரிக்கப் படுவதில்லை. வாசகர்களுக்குக் கிளுகிளுப்பு தரும் மசாலா விஷயமாகத் தான் இவையும் வெளியிடப்படுகின்றன. அமெரிக்கப் பணம் பண்ணிகள் காட்டிய வழியில்தான் வளர்த்து கொண்டிருக்கும் நாடுகளின் பிசினஸ்வாலாக்களும் செயல்புரிகிருர்கள்.

அறிவு வளர்ச்சிக்கும் ஆய்வுப் பணிகளுக்கும் நன்கு துணை புரியக் கூடிய வீடியோ போன்ற விஞ்ஞான சாதனங்களை, பெண்களை மயக்கிக் காமக் களியாட்டத்தில் ஆழ்த்தி, தந்திர மாகப் படம் பிடித்து புளுஃபிலிம்கள் தயாரித்து, மிகுதி யாகப் பணம் சம்பாதிப்பதில் ஈடுபடுத்துகிற காரியம் நடை பெறுகிறது. நாகரிகப் பெரு நகரங்களில்.

மேலே நாகரிகப் போக்குகளிளுல் வசீகரிக்கப் பெற்றுள் ளவர்கள், அனுதாபத்துக்குரிய பெண்களை சகலவழிகளிலும்

38