பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான். அவன் ஆடிக்கொண்டே பாடுகிருன். அநேகமாக பாட்டுக்குத் தக்கபடி வாயசைத்தான் என்றே சொல்லலாம். மெதுவாக, ஆளுல் உறுதியாக, தனது உடைகளை ஒவ்வொன்ருய் அவிழ்க்கிருன். தீக்கோழி இறகு ஒன்று அணி செய்த பெரிய தொப்பி வெளிப்படுகிறது. பார்வையாளர் களிடையே இருந்த ஒரு பெண்ணிடம் அது போய் சேர்கிறது. அவள் தனியாக இருக்கிருள். இருபது வயதைத் தாண்டியவள். அவலட்சணம் என்று சொல்ல முடியாது. அவள் அந்தத் தொப்பியை ஆசையோடு பற்றுகிருள். அடுத்துக் கழற்றி எறியப்பட்ட சட்டையைப் பிடிப்பதற் காக ஆர்வத்தோடு கை நீட்டுகிருள். சட்டையை தன் முகத்தருகே பிரியமாய் வைத்தபடி, ஆடுகிறவனேயே வைத்த கண் வாங்காமல் பார்க்கிருள். அவள் பெரிதும் உணர்வுக் கிளர்ச்சி பெற்றுக் கொண்டிருந்தது வெளிப்படை யாகவே தெரிந்தது.

அந்த ஆண் முழு அம்மணமானதும் ஆட்டம் முடிகிறது. உயரமான கறுத்த தோல் பூட்ஸ்கள் மட்டுமே அவன் உடம்பில் இருக்கின்றன. வசீகரிக்கும் அங்க அசைவுகளோடு அவன் நடந்து போகிருன். சுற்றிலும் கரவொவி அதிர்கிறது. விரைவிலேயே அவன் தனது தொழிலை செய்வதற்காகபணியாளனுகவோ, தனிப்பட்ட முறையில் சில பெண்களின் விருப்பத்துக்கிணங்கி அருகே நின்று ஆடை அவிழ்த்துக்காட்டு கிறவனுகவோ செயல் புரிய-மீண்டும் அந்த அறைக்கு வந்து சேர்கிருன்,

சுற்றிலும் பார்க்கிறபோது, அங்குள்ள பெண்களில் பெரும்பாலோர் இளையவர்கள்-இருபது வயதுக்கு மேல் முப்பது நாற்பது வயதுக்கு உட்பட்டவர்கள்-என்பதைக் காண்கிருேம், கவர்ச்சிகரமானவர்கள்தான். தனக்கென ஒர் ஆணைத் தேடிக் கொள்வதில் அவர்களில் யாருக்கு எந்த விதமான சிக்கலும் இருக்கமுடியாது. இல்லை, அவர்கள் ஏமாற்றம் அடைந்தவர்களில்லை; அடக்க முடியாத காமம் கொண்ட பெண்களும் இல்லை. சிலர் மட்டும் சலிப்படைந்த

46