பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவர்ச்சியாக விளம்பரங்கள் செய்வதன் மூலம் வாடிக்கை யாளர்களை ஈர்க்கின்றன. இரு பாலினரும் பரஸ்பரம் சந்தித்து அறிமுகம் செய்வதற்கு வசதியாகப் பல அமைப்புகளை இந் நிறுவனங்கள் இயக்குகின்றன. விசேஷ விருந்துகள், கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு தனிப்பட்ட அழைப்புகள் தமது வாடிக்கையாளர்களுக்குக் கிட்டுவதற்கு இவை உதவுகின்றன. தனியர்கள் தமக்கு ஏற்ற ஜோடிகளை எங்கே எப்போது சந்திக்கலாம்; அவர்களோடு எப்படி அறிமுகம் கொண்டு, பேசிப்பழகவேண்டும், நட்பை வளர்க்க வேண்டும் என்பதற்கெல்லாம் இந்நிறுவனங்கள் ஆலோசனை கள் வழங்குகின்றன; பயிற்சி தருகின்றன. எல்லாம் பணத்துக்காக-பிசினெஸ் ரீதியில் தான்.

ஹோமோ செக்ஷுவல் பார்ட்னர் தேவை என்று அமெரிக்க, பிரெஞ்சு பத்திரிகைகளில் விளம்பரங்கள் செய்வதற்கு வசதி இருக்கிறது. தினசரி இத்தகைய விளம்பரங்கள் அந்தப் பத்திரிகைகளில் நிறைய நிறைய வருகின்றன. ஹோமோ செக்ஷூவல் உறவுகள் தண்டனைக்கு உரிய குற்றங்களாக மதிக்கப்பட்ட நிலை மாறி விட்டது ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில், அதற்கேற்ப சட்டங்கள் திருத்தப்பட்டு, சமூக ரீதியில் அவை அங்கீரிக்கப்பட்டிருக் கின்றன.

இதை விட அதிர்ச்சி தரக் கூடியது, காம உறவுக்குக் குழந்தைகளே உபயோகிக்கிற கயமைத்தனம்.

அமெரிக்காவில் இந்த அநாகரிப் போக்கு அதிகரித்து வருகிறது. 4-5 வயது முதல் 12-13 வயது வரையான பெண் குழந்தைகள் நாள்தோறும் வெறித் தன ஆண்களால் சீர்குலேக்கப்படுகிருர்கள்.

குழந்தைகளை எப்படி அணுகி, வசீகரிப்பது: எவ்வாறு தங்கள் இச்சைக்கு உடன்படச் செய்வது; குழந்தைகளின் நம்பிக்கையைப் பெறுவதற்கான வழிவகைகள் போன்ற ஆலோசனைகளே வழங்குவதற்கு என்றே அங்கு தனிப் பத்திரிகைகள் நடத்தப்படுகின்றன. புத்தகங்கள் பிரசுரம் ప; 壶母