பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெறுகின்றன. இவை அதிகம் விற்பனையாவதாகச் செய்திகள் கூறுகின்றன.

குழந்தையை சிநேகம் பிடிப்பதற்காக முதலில், குழந்தைகள் இருக்கிற வீட்டில் பேபி சிட்டர்’ ஆகச் சேரவேண்டும் என்று தொடங்கி, மேற்கொண்டு எப்படி எப்படி அணுக வேண்டும் என்றெல்லாம் பயிற்சி தருகின்றன. அவை.

80 களின் ஆரம்பத்தில் இதற்கென்று 264 சஞ்சிகைகள் இருந்தன. 30,0,000 குழந்தை மாடல்கள் இந்த வேலையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன என்று ஒரு பத்திரிகைச் செய்தி அறிவிக்கிறது.

கால ஓட்டத்தில் இந்த எண்ணிக்கை அதிகரித்திருக்குமே தவிரக் குறைந்திராது.

வளர்ச்சி பெற்றுள்ள மேலே நாடுகளின் விபரீதப் போக்குகள் பலவற்றையும் காப்பி அடிக்கிற வளர்முக நாடுகளிலும் இக் கலாசாரச் சீரழிவுகள் தலைகாட்டியிருக்கத் தான் வேண்டும். அவை குறித்த உண்மைகள் மெது மெதுவாக அம்பலத்துக்கு வரக்கூடும்.

தற்காலத்தில் தமிழ்நாட்டு செய்திப் பத்திரிகைகளிலும் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியில் இழைக்கப்படுகிற தீங்குகள் பற்றிய செய்திகள் அவ்வப்போது வந்து கொண்டு தான் இருக்கின்றன.