பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த விதமான இசைக்கூத்து உலகநாடுகள் பலவற்றி லும் இளைஞரிடையே பலத்த ஆதிக்கம் செலுத்தி வரு கிறது, இருபது வருடங்களுக்கும் மேலாகவே, ஒரு விமர்சகர் கு றி ப் பி ட் டு ள் ளது போல, தி ராக் அன் ரோல் குழுவினரின் புகழ் மகோன்னதமான உயரத்தை எட்டி யுள்ளது. ஏனென்ருல், இளையவர்கள், இளமையின் அடிப் படையாக அமைகின்ற அதிகார எதிர்ப்பு, சம்பிரதாயங்களை எதிர்ப்பது ஆகியவற்றின் தன்மைகளை அவர்களிடம் கண்டார்கள்.”

அமெரிக்காவின் மிகவும் கீர்த்தி பெற்ற ராக் அன் ரோல் இசைக்குழுவான ரோலிங் ஸ்டோன்ஸ் செக்ஸ் மற்றும் கட்டுப்பாடற்ற இயல்புகள் காரணமாக வெகு பரபரப்பு ஏற்படுத்தி வந்திருக்கிறது. இருபது வருடங்களாக மிகுந்த புகழுடன் வளர்ந்துவரும் இந்தக் குழு உலகிலேயே மிகப் பெரிய ராக் அன் ரோல்' என்று பாராட்டப்படுகிறது.

மேற்கத்திய நாடுகளில் மிகுந்த புகழ் பெற்றுவிட்ட ரோலிங் ஸ்டோன்ஸ் என்ற இளைஞர் இசைக்குழு பற்றி பல நூல்கள் வெளி வந்திருக்கின்றன. அவர்கள் பற்றிய திரைப்படங்கள் கூட தயாராகியுள்ளன. ஆயினும், அவர் களுடைய ஆரம்பநிலை சர்வ சாதாரணமாகத் தான் இருந்தது.

மிக் ஜேகர், கீதர் ரிச்சர்ட், பிரியன் ஜோன்ஸ், சார்வி வாட்ஸ், பில் வைமன் என்ற இளைஞர்கள் ஒரு குழு ஆகச் சேர்ந்தார்கள். அப்போது அவர்கள் 20 வயதுக்கு உட் பட்டவர்கள் தான். பள்ளி ஆசிரியர்கள், கட்டிடத் தொழிலாளி, காரோட்டி, ஓர் இஞ்ஜினியர் ஆகியோரின் புதல்வர்கள் அவர்கள். இக்குழு ஞாயிறு தோறும் லண்டன் மாநகர ஓட்டல் ஒன்றில் இசைக் கச்சேரி நிகழ்த்தி வந்தது. மிக் பாட, கீதர் கித்தார் வாசிக்க, பில் பேரிகை தட்ட ஜனரஞ்சக சங்கீதத்தை அவர்கள் முழக்கினர்கள்.

5 I