பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீழே சிறு பகுதியையும் காட்சிப்படுத்துகிறது. ஏதோ கொஞ்சம் நிஜமான செக்ஸ்!

அவன் பாடுகிருன். அவன் பாவனைகள் கெட்ட வையாகத் தோன்றுகின்றன. அவற்றின் காமக்கருத்து வெளிப்படையாகத் தெரிகிறது. கும்பல் வெறி கொள் கிறது. ஜாகர் கால்களை வீசி உதைக்கிருன், வட்டமிட்டுச் சுழல்கிருன், ரோஜா இதழ்களே அவர்கள் மீது வீசுகிருன். "மிட்நைட் ரேம்ப்ளர் (நள்ளிரவு ஊர்சுற்றி) பாடுவதற்குரிய வேளே வந்துவிட்டது. கற்பழிப்பை சித்திரிக்கும் முரட்டுத் தனமான பண்பற்ற பாடல் அது. ஜாகர், உலோகம் பதித்த இடுப்பு பெல்ட்டை சுழற்றி அடிக்கிருன். காம ஆவேசத்துடன் அவன் ஒரு பெண்ணே சுட்டிக்காட்டி, என் கத்தியை உன் தொண்டைக் குழிக்குள் ஆழப்பாய்ச்சப் போகிறேன், பாப்பா. அது வலிதரும் என்று கத்துகிருன், அரைவட்டமாகச் சுழன்று அவன் கீத் ரிச்சார்ட் முன்பு கீழே படுத்து, காமச் சேட்டைகள் செய்து காட்டுகிருன்.

அந்தக் குழுவின் பூரண வாழ்வே வன்முறை, செக்ஸ், மருந்துகள் நிறைந்த வெறியாட்டமாகவே அமைந்துள்ளது. அப்படியிருந்த போதிலும், நம்பமுடியாத அளவு வெற்றியின் உச்சத்திலேயே அவர்கள் சஞ்சரித்துக் கொண்டிருக்கிரு.ர்கள். மோசமாக இருந்தபடியே தங்களுக்கு நல்லது பண்ணிக் கொள்வது எப்படி என்பதைக் காட்டும் ஒர் உதாரண மாகவே ஸ்டோன்களின் வாழ்வு எப்போதும் இருந்து வருகிறது.'

செக்ஸ் மற்றும் வன்முறைச் செயல்களை பெரிது படுத்தியும் வெளிச்சமிட்டும் விளம்பரப்படுத்தியும் மேலை நாடுகளின் நசிவுக் கலாசாரம்-முக்கியமாக அமெரிக்கக் கலாசாரம்-உலக நாடுகளின் இளைஞர்களை பித்தர்களாய், கனவு வாதிகளாய், செயலற்றவர்களாய், வீனர்களாய், வெறியர்களாய் மாற்றி, வளர்முக நாடுகளின் நேரிய வளர்ச்சியை சீர்குலத்து வருகிறது.

54